Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 09 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
புத்தளம், மணல்தீவு கிராம சேவையாளர் பிரிவு மற்றும் தில்லையடி கிராம சேவையாளர் பிரிவுகளில் இரு உப தபால் நிலையங்களை அமைப்பதற்கு தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இணக்கம் தெரிவித்துள்ளாதாக, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.
மேற்குறித்த இரு பிரதேசங்களுக்கும் இதுவரை காலமும் புத்தளம் தபால் நிலையம் மூலமாகவே தபால்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளன.
புத்தளம் தபால் நிலையத்தில் ஆளணி பற்றாக்குறை நிலவிய போதிலும், அங்கு சிற்றூழியராகக் கடமையாற்றியவ ஒருவரும், தந்தி விநியோகாஸ்தர் ஒருவருமே இப்பிரதேசங்களுக்கான தபால்களை விநியோகம் செய்து வந்துள்ளனர்.
எனினும், குறிப்பிட்ட பிரதேசங்களில் வதியும் இடம்பெயர்ந்த மக்களின் முகவரிகளுக்கு கடிதங்கள் சரியாக சென்று அடையாமை மற்றும் குறித்த ஒரு வியாபார நிலையத்தின் முகவரிகளை வழங்கியுள்ள பொது மக்களுக்கு அந்த கடிதங்கள் சரியாக செல்லாமல் திரும்பி செல்கின்றமை போன்ற காரணங்களினால், பொது மக்கள் மிகுந்த அசௌகரியங்களை மேற்கொண்டு வருவதாக தனது கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சரை அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் இவ்விரு பிரதேசங்களுக்கும் உப தபால் நிலையங்களை அமைக்க அமைச்சர் உடன்பட்டதாகவும், கூடிய விரைவில் புத்தளம் நகரில் பதிவு செய்யப்படாமல் இருக்கின்ற பள்ளிவாசல்கள் தொடர்பாக இடம்பெயர் சேவை ஒன்றை நடத்த அமைச்சர் இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த இந்த பிரதேசங்களில் உப தபால் நிலையங்கள் அமைக்கப்பெறுமிடத்து சுமார் 12 ஆயிரம் உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago