2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புதிய செயலாளர் நியமனம்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகரசபையின் செயலாளராக கடமையாற்றிய டபிள்யூ.ஜீ. நிசாந்த குமார குருநாகல் மாவட்டத்தின் மாவத்மகம பிரதேச சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று புதன்கிழமை (25) உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அத்துடன், புத்தளம் நகரசபைக்கு நிரந்தர செயலாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் பதில் செயலாளராக கடமையாற்றுவார் என புத்தளம் நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.எம். ஷபீக் தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம் நகரசபையின் செயலாளராக கடமையாற்றிய டபிள்யூ.ஜீ. நிசாந்த குமாரவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என  அண்மையில் நகர சபைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X