2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பரிகாரக் கற்பித்தல் முறையின் ஐந்தாவது செயற்திட்டம் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணக் கல்வி அமைச்சினால், ஐந்தாவது முறையாகவும் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் முறை (Remedial teaching) முறையினை கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்க, வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச் செயற்திட்டத்தின் மூலம் வடமேல் மாகாணத்திலுள்ள ஆங்கில மொழி அறிவில் வளங்குன்றிய மாணவர்களுக்கான கல்வியறிவினை மேம்படுத்தும் முகமாக இச்செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கென பாடசாலை நாட்களில் திங்கட்கிழமையிருந்து வியாழக்கிழமை வரையில் காலை 6 மணியிலிருந்து 7.15 வரையிலான நேரப்பகுதி இதற்கென ஒதுக்கப்படும். 

இப்பாடவேளையின் போது  கடந்த கால ஆங்கிலமொழி வினாத்தாள் பயிற்சி வழங்கப்படுவதுடன், அதற்கான விளக்கங்களும் வழங்கப்படும். 

சிலா/ கார்மேல் மகளிர் கல்லூரி, மாதம்பை அல்மிஸ்பா முஸ்லிம் வித்தியாலம், சிலா/ நஸ்ரியா மத்திய கல்லூரி மற்றும் கருக்கு சுகததாச மத்திய கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகள் இச் செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இப்பாடசாலைகளுக்கான இலவசப் பயிற்சி நெறிமுறைகள் நடைமுறைப்படுகின்றன.

இப்பயிற்சித் திட்டமானது, பெப்ரவரியிலிருந்து ஜூலை மாத இறுதி வாரம் வரையில் நடைபெறும் என்பதுடன், அதன் பின்னர் க.பொ.த (சா/த) பரீட்சை பரீட்சைக்கான இறுதித் தவணைவரையில் பயிற்சிக் கருத்தரங்குகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்திட்டமானது சிலா/ சென் பென்டிக் கல்லூரியிலும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X