2025 மே 14, புதன்கிழமை

பரிசளிப்பு விழாவும் திறப்பு விழாவும்

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

குருநாகல் பாணகமுவ அந் - நூர் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புனரமைக்கப்பட்ட மண்டபத்  திறப்பு விழாவும் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00  மணி முதல் அந்நூர் மத்திய கல்லூரி உஸாமா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக இப்பாகமுவ கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ஆர். ஏ.  எஸ். பீ ரத்னசேகரவும் விசேட அதிதிகளாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம். எம். தஸ்லீம் அந்நூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர்களான எம். எம். ஜமால்தீன், ஏ, ஸீ, செய்யது அஹமட், எம். எல். ஏ. ஸமத், ஏ. சீ எம். முஸ்தபா, எஸ். ஏ. சலாம் , எம். எம். மவ்சூக் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

2014ஆம், 2015ஆம் ஆண்டு க. பொ. த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப்  பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் மாணவிகள், கல்வியற் கல்லூரி, பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள். தமிழ் தினப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் எனப் பல பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .