2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளில் இடை விலகும் மாணவர்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன் 

பாடசாலைகளில் இருந்து இடை விலகும் மாணவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று, புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய காரியாலய கேட்போர் கூடத்தில், நேற்று (23) நடைபெற்றது.

பாடசாலை கல்வி​யை மாணவர்கள் இடை நடுவில் கைவிட்டுச்  செல்வதற்கான காரணங்கள் தொடர்பாக, அங்கு வருகைதந்திருந்த பெற்றோரும் கல்வியியலாளர்களுக்குமிடையில், விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதடன்,  ஆக்க பூர்வமான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திட்ட முகாமையாளர் ராஜரத்னம் சுகுனாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  புத்தளம் வலய கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் ஏ.ஜீ.எம்.நௌபர், புத்தளம் தில்லையடி அன்சாரி முஸ்லிம் மஹா வித்தியாலய அதிபர் ஏ.எச்.ஏ.வதூத், தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய அதிபர் ஏ.எம்.ஜவாத் உள்ளிட்ட பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .