2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

புத்தளத்தில் “ வரும் முன் பாதுகாப்போம்” திட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ம்.யூ.எம்.சனூன் 

புத்தளம் நகரை  மழை, வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, “ வரும் முன் பாதுகாப்போம்” என்ற   திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தனது பதவிக் காலத்தில் தொடர்ச்சியாக  இந்த திட்டத்தை  முன்னெடுத்து வருகிறார்.

இம்முறையும் கே.ஏ.பாயிஸின் வழிகாட்டலில், “ வரும் முன் பாதுகாப்போம்”  சிந்தனைக்கமைய,  புத்தளம் நூர்  நகர் புகையிரத நிலையத்துக்குப் பின்னாலுள்ள பாரிய கால்வாய் மற்றும் அதனைச் சூழவுள்ள வடிகான்கள், பெகோ இயந்திர பங்களிப்புடன் நகரசபை ஊழியர்களால் கடந்த 04 ஆம் திகதி, துப்புரவு செய்யப்பட்டது.

மழைக் காலத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதானது, காத்திரமான நடவடிக்கையாகுமென,  புத்தளம் நகர பொதுமக்கள்,  நகர பிதாவுக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .