Niroshini / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
12 வயது மாணவன் மீது கொதிக்கும் தேநீரை ஊற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சங்கீத பாட ஆசிரியரை, இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்த நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த, அவருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தார்.
நீர்கொழும்பு - பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் சங்கீத பாட ஆசிரியரே இவ்வாறு வெள்ளிக்கிழமை(09) பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் 12 வயது மாணவன் ஒருவன் குறித்த ஆசிரியரின் மீது மோதியதில் ஆசிரியரின் கையில் இருந்து தேநீர் ஆசிரியரின் மேல் கொட்டியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த ஆசிரியர், எஞ்சியிருந்த தேநீரை மாணவன் மீது கொட்டியுள்ளார்.
இதில் காயத்துக்குள்ளான மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர், குறித்த ஆசிரியரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்செய்தபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
4 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago
3 hours ago