Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்ஹ
வண்ணாத்திவில்லு கலாஓயாவுக்கு குளிப்பதற்கெனச் சென்ற இருகுழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், வண்ணாத்திவில்லு பிரதேசசபையின் முன்னாள் உப தலைவர் உட்பட ஆறுபேரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இக்கைகலப்புச் சம்பவமானது, கடந்த சனிக்கிழமை (18) மாலை வேளை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வண்ணாத்திவில்லு, எலுவன்குளம் கலாஓயா குளியல்பகுதிக்குச் சென்றவேளை, கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் வண்ணாத்திவில்லு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், காயமடைந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
குறித்த குழுவில் 16 பேர் நேற்று திங்கட்கிழமை (19) கைதுசெய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வண்ணாத்திவில்லு பிரதேசசபையின் முன்னாள் தலைவருக்கும் தொடர்பிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. முன்னாள் பிரதேசசபைத் தலைவருட்பட மேலும் ஆறுபேருக்குத் தொடர்பிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago