2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மேற்பார்வை அதிகாரிகள் பாடசாலைகளுக்கு விஜயம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பிரதேச பாடசாலைகளுக்கு உலக வங்கியின் மேற்பார்வை அதிகாரிகள் குழுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (09) விஜயம் செய்தது.

குறித்த மேற்பார்வை குழுவினருடன் புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் பணிப்பாளர் டபிள்யூ. பி.எஸ்.கே. விஜேசிங்க, உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.எம். அர்ஜுன, தமிழ் பிரிவுக்கு பொறுப்பான உதவி கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ சன்ஹிர் மற்றும் அலி ஜின்னாஹ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மதுரங்குளி நல்லாந்தளுவ முஸ்லிம் ஆரம்ப பாடசாலை, கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்த மேற்படி குழுவினர் மாணவர்களின் வினைத்திறன் மிக்க ஆக்கங்கள், வகுப்பறை சூழல், பாடசாலை சுற்றாடல் மற்றும் நிர்வாக கட்டமைப்பு என்பவற்றை பார்வையிட்டதுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடனும் கலந்துரையாடடினார்கள்.

இதன்போது இக்குழுவினர் குறித்த பாடசாலைகளில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X