Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன், எம்.எஸ்.எம். முஸப்பிர்
ஜனாதிபதியினால் கைசாத்திடப்பட்டுள்ள மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தின் 40030.525 ஹெக்டயர் காணிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வில்பத்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி, முசலி மற்றும் மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மை நிலையை கேட்டறிந்து கொள்ள புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர் குழுவினர், மறிச்சிக்கட்டி பிரதேசத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (16), கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
முசலி பிரதேச மக்களின் இந்த 21ஆவது நாளான (ஞாயிற்றுக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஜீ. சுபியான், எச்.எம். காமில் உள்ளிட்ட மறிச்சிக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் உலமாக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
"1990இல் புலிகளால் நாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம். 23 வருடங்கள் புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்த நாம், புத்தளம் மாவட்ட மக்களின் வளங்களை அனுபவித்தோம்.
“2010ஆம் ஆண்டு எமது சொந்த நிலங்களுக்கு திரும்பி வந்த நாம், அழிந்து போன நிலையில் இருந்த வயல் நிலங்களை, மேய்ச்சல் நிலங்களை, குளங்களைத் திருத்தியமைத்து வாழத் தொடங்கினோம்.
“ இந்நிலையில், பொது பல சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் வில்பத்தை அழிக்கின்றோம் என்கின்ற வீணான தகவல்களை, ஜனாதிபதிக்கு வழங்கி, இந்த வர்த்தமானி ஒப்பம் இடப்பட்டுள்ளது.
“வில்பத்து பிரதேசமானது, புத்தளம் மற்றும் அநுராதபுர மாவட்டத்துக்கு உள்ளடங்குகிறது. வர்த்தமானியில் ஒப்பமிடப்பட்ட பிரதேசத்துக்குள், முஸ்லிம்களின் கிராமங்கள் மாத்திரமல்ல தமிழ் மற்றும் சிங்கள கிராமங்களும் உள்ளடங்குகிறது.
“எனவே, எமது நிலத்தைத் திரும்பத் தாருங்கள் என்றே நாம் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்துள்ளோம்” எனத் தெரிவித்த முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஜீ. சுபியான் மற்றும் எச்.எம். காமில் ஆகியோர், ஆதாரபூர்வமான காணி சீட்டுக்களையும் இதன்போது ஊடகவியலாளர்களுக்குக் காண்பித்தனர்.
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago