Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மார்ச் 09 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடந்த 6 ம் திகதி மூன்று பேருடன் கடலுக்குள் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு மற்றும் அதில் பயணித்த மீனவர்கள் மூவரும் வெள்ளிக்கிழமை (08) பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்குள் மூன்று மீனவர்கள் பயணித்த இயந்திர படகு கரை திரும்பவில்லை என அந்த இயந்திர படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் 6 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் இயந்திர படகுடன் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்களும் இரண்டு நாட்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறு காரணமாக குறித்த இயந்திர படகு இயங்காமல் போனதாகவும், பின்னர் கடலில் மிதக்க ஆரம்பித்த குறித்த படகு இந்திய கடல் எல்லையோரம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.
குறித்த மூன்று மீனவர்களும் உணவு, குடிநீர் இன்றி இரண்டு இரவுகளை கடலில் கழித்துள்ளதாகவும், இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர்கள் இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் என்பவற்றை வழங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago