Princiya Dixci / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

- ஹிரான் பிரியங்க ஜயசிங்க
புத்தளம் - அநுராபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வௌ பகுதியில் நேற்று சனிக்கிழமை (13) பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றுக்கு முன்னால் யானையொன்று குறுக்கிட்டதன் காரணமாக, குறித்த பஸ்ஸும் அதன் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, வான் சாரதி உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கொழும்பைச் சேர்ந்த எட்வட் ரமேஸ் குமார (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

19 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
50 minute ago
1 hours ago