2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விழிப்பூட்டல் பேரணி

Niroshini   / 2016 ஜூலை 04 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

“போதை பொருள் பாவனையை ஒழித்துக்கட்டி போதைபொருள் இல்லாத நாடாக இந்த நாட்டினை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் புத்தளம் நகர சபை நிர்வாகம் ஏற்பாடு செய்த விழிப்பூட்டல் பேரணி, இன்று திங்கட்கிழமை (04) காலை புத்தளத்தில் இடம்பெற்றது.

போதையற்ற நாடாக இந்த நாட்டை உருவாக்குவோம் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு ஆதரவாக இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தளம் நகர சபையின் செயலாளர் கே.பீ.சந்தன குமார, பிரதம நிர்வாக அதிகாரி எச்.எம்.சபீக் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் எம்.சுரேஷ் ஆகியோர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

புத்தளம் நகர சபை வளாகத்திலிருந்து புறப்பட்ட இவ்ஊர்வலம், புத்தளம் நகர மத்தி ஊடாக புத்தளம் பெரிய பள்ளி வரை சென்றது.

அதன்பின்னர், புத்தளம் நகர சபையின் ஊழியர்கள் போதைபொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புத்தளம் நகரின் பல்வேறு முச்சந்திகளில் பொதுமக்கள் ஒன்று கூடி இனம், மதம் பாராது தமது கையொப்பமிட்டனர்.

.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X