Princiya Dixci / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முஹம்மது முஸப்பிர்
முந்தல் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி - ஆண்டிகம வீதியில் நேற்று வியாழக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்ததையடுத்து, இரண்டு மாதங்களேயான கர்ப்பிணியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
ஆண்டிகம வீதியின் தேவால ஹந்தி எனுமிடத்தில் வயோதிபரொருவர் பயணித்த துவிச்சக்கரவண்டியை, பின்னால் சென்றுகொண்டிருந்த குறித்த கர்ப்பிணிப் பெண் செலுத்திய கார் மோதியதில் வயோதிபர் படுகாயங்களுக்குள்ளானார்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான வயோதிபர், உடனடியாக முந்தல் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது நிலை மோசமாக இருந்ததால் அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபரென, கார் ஓட்டுநரான குறித்த கர்ப்பிணியைக் கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குணவில தேவாலஹந்தி பிரதேசத்தைச் சேர்ந்த பீ. மல்லவாராச்சி (வயது 72) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago
1 hours ago