Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
சிலாபம்-காக்காபள்ளி, மாதம்பை வீதியின், தம்பகல்ல பிரதேசத்தில், இன்று (11) காலை, டிப்பர் ஒன்றும் கார் ஒன்றும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரை செலுத்திய சாரதியே விபத்தில் படுகாயமடைந்துள்ளாரென, மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்றபோது, காரில் வேறு எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாதம்பை பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago