Editorial / 2024 ஜனவரி 25 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் வியாழக்கிழமை( 25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளர்.
இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தேகம, வெலேவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இராணுவ விஷேட படையின் லெப்டினன்ட் பதவி வகித்த ஜீவக செனவிரத்ன மற்றும் அவரது 10 வயதான மகன் மனுஜ பிரபாஸ்வர ஆகிய இருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இராணுவ வீரர் , மகன் மற்றும் மனைவி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ - நவகத்தேகம பிரதான வீதியின் ரஜமஹா விகாரைக்கு முன்பாக லொறியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
39 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026