2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

விவரணப் படம் திரை

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

இலங்கை முஸ்லிம்களின் கல்வி அறிவியல் பாரம்பரிய மறுமலர்ச்சியின் தந்தையாகக் கருதப்படும் அறிஞர் சித்திலெப்பையின் வரலாற்றை, சமூகப் பங்களிப்பை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் ஆய்வு ரீதியான  படமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். 

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவரது முயற்சியில், அறிஞர்கள் மற்றும் கல்விமான்களின் பங்களிப்புடன் Knowledge Boxனால் வெளியிடப்பட்டுள்ள இந்த விவரணப் படம், புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களுக்காக நேற்று  (08) திரையிடப்பட்டது.

இந்நிகழ்வில்  பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ. ஸன்ஹீர், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு முன்னாள் உதவிக் கல்வி பணிப்பாளர் ஜவாத் மரிக்கார், புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் எம்.எச்.எம். நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X