2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சமபோஷ அனுசரணையுடன் நடைபெற்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்தா

A.P.Mathan   / 2013 மார்ச் 18 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகள் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இலங்கையில் இனிப்பு தயாரிப்புகளை விநியோகித்து வரும் பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி வர்ததகநாமமான சமபோஷ அனுசரணையுடன் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது. இரண்டாம் இடத்தை ஈரான் அணியினரும், மூன்றாமிடத்தை பங்களாதேஷ் அணியினரும், நான்காம் இடத்தை இலங்கை அணியினரும் வென்றனர்.

இப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வில் ஷிரானி ஹேவகே, பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன, பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் வசந்த சந்திரபால, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர். இப்போட்டிகளில் இலங்கை அணியுடன், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Final standings:
India                   15 points
Iran                     12 points
Bangladesh         7 points
Sri Lanka              6 points
Tajikistan              4 points
Bhutan                  0 point

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .