2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் மூன்றாம் காலாண்டின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ.532 மில்லியன்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 04 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, செப்டெம்பர் 2014 உடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டின் வரிக்குப் பிந்திய இலாபமாக 532 மில்லியன் ரூபாவை பதிவு செய்துள்ளது. குறித்த காலப்பகுதியில் ஆயுள் தவணைக்கட்டணங்கள் 21 வீத அதிகரிப்பை பதிவு செய்து, 2.2 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் பதிவாகிய 378 மில்லியன் ரூபாய் அதிகரிப்பு என்பது துறையில் பதிவாகிய உயர் பெறுமதியாக காணப்பட்டது. கம்பனியின் முதலீட்டு இலாகா எய்தியிருந்த சிறந்த பெறுபேறுகளுடன் இணைந்து இது பதிவாகியிருந்தது. இந்த பெறுபேறுகளில் முதல் காலாண்டுக்கான ஆயுள் பிரிவின் பெறுபேறுகள் உள்ளடங்கியுள்ளதுடன், ஏனைய மூன்று காலாண்டுகளுக்கான பெறுபேறுகள் முழுமையான காலப்பகுதியில் பிரதிபலிக்கப்படும்.
 
முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்கான மொத்த தவணைக்கட்டணங்கள் 3.48 பில்லியன ரூபாவாக பதிவாகியிருந்தது. பொது காப்புறுதி தவணைக்கட்டணங்கள் 1.3 பில்லியன் ரூபாவாகும். ஆயுள் பிரிவின் வரிக்கு பிந்திய இலாபம் 511 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. பொது காப்புறுதி பிரிவு 21 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்கான கம்பனியின் பெறுபேறுகள், துறையின் ஏனைய நிறுவனங்களை விட சிறந்த மட்டத்தில் காணப்படுகிறது, ஆயுள் மற்றும் பொது துறைகளில் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் முறையே 8% மற்றும் 2% ஆக பதிவாகியிருந்தன.
 
துறையின் முன்னோடியாக திகழ்வது தொடர்பில் சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் பெறுமதி வாய்ந்த கொள்கைகளுக்கமைவான திட்டங்களின் மூலம் எய்தப்பட்ட உறுதியான பெறுபேறுகளாக இது அமைந்துள்ளது. வளர்ச்சி தொடர்பில் கம்பனி இலட்சியத்துடனான பயணத்தை மேற்கொண்டுள்ளது. காப்புறுதி துறை தொடர்பில் தளரா நம்பிக்கை கொண்டுள்ளதுடன், வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதும் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது. 
 
ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் ஆயுள் பிரிவு என்பது சந்தையில் ஐந்தாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைகளை வழங்கி வருவதுடன், துறையில் ஒப்பற்ற சேவைகளையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் நோக்கம் என்பது தளம்பாமல் காணப்படுவதுடன், சிறந்த பாதுகாப்பு திட்டங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தெரிவு செய்து கொள்ளக்கூடிய சேவைகளை வழங்கி வருகிறது. பொது காப்புறுதி துறை என்பது உறுதியாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதில் புதிய கொள்கைகள் மற்றும் புத்தமைவுகள் போன்றன பங்களிப்பை வழங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சௌகர்யத்தை வழங்கும் வகையில், புதிய DRIVE THRU கொள்கையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், 365 நாட்கள் காப்புறுதி சேவையும் மோட்டார் காப்புறுதி வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கம்பனியின் சுகாதார வியாபாரமும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போது துறையில் 4 ஆம் இடத்தில் காணப்படுகிறது.
 
ஏசியன் அலையன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் பங்குதாரர்களில் சர்வதேச புகழ்பெற்ற AAA DFI தாபனங்களான DEG மற்றும் FMO போன்றன உள்ளடங்கியுள்ளன. சகல மாகாணங்களையும் உள்ளடக்கி கம்பனி 54 பகுதிகளில் கிளை வலையமைப்பை கொண்டுள்ளது. சுகாதாரத்துறை, விற்பனை, நிதிச் சேவைகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், ஓய்வு, வாகனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X