2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரிட்ஸ்பரி அனுசரணை வழங்கும் தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் போட்டிகள் 2013

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதற்தர சொக்லேட் வர்த்தகநாமமான ரிட்ஸ்பரி, தொடர்ச்சியாக 6ஆவது ஆண்டாக  இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் மூலம் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற 24ஆவது தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் போட்டிக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இப் போட்டியானது இம்மாதம் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கொழும்பு தமிழ் யூனியன் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 
 
இப் போட்டிகளில் 300 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். 8 தினங்களில் நடைபெறவுள்ள 18 போட்டிப் பிரிவுகளில் 09, 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான போட்டிகளும், 11, 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட அனுபவமற்ற ஆண் மற்றும் பெண்களுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளன.
 
இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் தலைவர் கொமதோர் பாலித வீரசிங்க கருத்து தெரிவிக்கையில், 'எவ்வித தயக்கமும் இன்றி தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக ரிட்ஸ்பரி எமது அழைப்பிதழை ஏற்றுக்கொண்டது. ரிட்ஸ்பரி வர்த்தகநாமமானது தொடர்ச்சியாக இப்போட்டிக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், இலங்கை பாடசாலைகள் மத்தியில் இப்போட்டியை பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது' என தெரிவித்தார்.
 
இந்த அனுசரணை குறித்து சிபிஎல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை சொக்லட் துறையின் சந்தை முன்னோடியாக திகழும் ரிட்ஸ்பரி ஆனது, ஸ்கொஷ் வீர, வீராங்கனைகளை உருவாக்குவதற்கான அடித்தாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் இப்போட்டியுடன் இணைந்து செயற்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறது. இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்துடன் நீண்டகாலம் இணைந்து செயற்பட எண்ணியுள்ளோம்' என்றார்.
 
இப் போட்டிகளில் வீர, வீராங்கனைகள் வெளிப்படுத்தும் திறமைகள் சர்வதேச போட்டிகளில் வீரர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்ளப்படுவதால் இப் போட்டி இலங்கையின் ஸ்கொஷ் வீரர்கள் மத்தியில் மிக முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
 
'19 வயதுக்குட்பட்ட ஆண்கள்; மற்றும் பெண்கள் பிரிவில் ரவிந்து லக்சிறி மற்றும் மிஹிலிய மெத்சரனி ஆகியோர் முன்னணியில் உள்ளனர். 17 வயதுக்குட்பட்ட பிரிவின் கீழ் ஆசியளவில் மூன்றாவது இடத்திலுள்ள மிஹிலிய மற்றும் ரவிந்து ஆகியோர் தேசியளவில் முதலிடத்தில் உள்ளனர்' என ளுடுளுகு இன் உப தலைவர் கப்டன் லசந்த டி சில்வா தெரிவித்தார்.
 
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெற்றியீட்டுபவர்களுக்கு 'நவீன் பியதிஸ்ஸ' சவால் கிண்ணமும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெற்றியீட்டுபவர்களுக்கு 'நிராஷா குருகே' சவால்; கிண்ணமும் வழங்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக, ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளை உள்ளடக்கிய 13 பிரிவுகளில் 'சிறந்த மேம்படுத்தப்பட்ட வீரர்' ருக்கான இரு விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .