2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் பட்டமளிப்பு விழா-2014

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் பட்டமளிப்பு விழா 2014 இல் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் வணிக முகாமைத்துவம் துறைகளில் 1052 பட்டதாரிகளுக்கு முதுமானி மற்றும் இளநிலை பட்டங்கள் வழங்கப்பட்டன. SLIIT கல்வியகத்தினால் இதுவரை 8000 பட்டதாரிகள் மற்றும் 16,000 நிபுணர்கள் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றலுடன் கடந்த பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மாலபே கம்பல் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 6 அமர்வுகளின் கீழ் மாணவர்கள் தங்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவின் ஒவ்வொரு அமர்வுகளிலும் ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பிலிப் ஜோன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் கர்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர்.அன்ட்ரிஸ் ஸ்டெல்பொவிக்ஸ் ஆகியோர் உரையாற்றினர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்.ஷனிகா ஹிரிம்புரேகம, மொறட்டுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர்.கே.கே.பெரோரா, இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் தலைவர் (IESL) ஷவிந்திரநாத் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் SLIIT இன் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே மாணவர்களுக்கு விருதுகளையும், SLIIT வேந்தர் பேராசிரியர்.சாம் கருணதாரத்ன பட்டங்களையும் வழங்கினர்.

இந் நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்.ஷனிகா கருத்து தெரிவிக்கையில் 'இன்று நாம் அறிவு சார்ந்த சகாப்தத்தில் இருக்கிறோம். அறிவு தான் சக்தி, பலம் மற்றும் ஆற்றல். தாம் தேர்ந்தெடுத்த துறைகளில் திறமைசாலிகளாக இருத்தல் வேண்டும். SLIIT மாணவர்கள் தத்தமது துறைகளில் திறமைசாலிகளாக திகழ்கின்றமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என தெரிவித்தார்.

இலங்கை பொறியியல் நிறுவகத்தின் தலைவர் ஷவிந்திரநாத் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'SLIIT கல்வியகமானது IT துறையில் நிலவும் உயர்கல்வி இடைவெளிகளை நிரப்புகிறது. SLIIT ஆனது பொறியியல் துறை உட்பட பல்வேறு கல்வி திட்டங்களை வழங்கி வருகிறது' என்றார். மேலும் அவர் தன் வாழ்வின் பெறுமதி மிக்க படிப்பினைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மொறட்டுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர்.கே.கே.வை.டபிள்யு.பெரேரா, 'SLIIT பட்டதாரி கல்வி திட்டங்கள் அனைத்தும் இக் கல்வியகத்தின் தலைவர், கல்வி மற்றும் கல்வி சாரா பணியாளர்களின் முயற்சியின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கீகாரத்தை பெற்றுள்ளன. இக் கல்வியகம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை வழங்குகிறது' என்றார்.

SLIIT கல்வியகத்தின் தலைவர் பேராசிரியர்.எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'எமது மாணவர்களின் சாதனைகள் குறித்து மிகவும் பெருமையடைவதுடன், வகுப்பறை மற்றும் வேலைச் சூழல் உள்ளிட்ட போட்டிகரமான களத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான திறனை கொண்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற முற்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்' என்றார்.

இப் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருதுகளுக்கான தொழிற்துறை அனுசரணையை IFS, Virtusa, EPIC லங்கா, BOC, டயலொக் Axiata> Zone 24 x 7 மற்றும் இலங்கை கணினி சமூகம் (CSSL) ஆகியன வழங்கியிருந்தன.

SLIIT கல்வியகத்தின் மூலம் இதுவரை தேசத்திற்கு சேவையாற்றக் கூடிய சுமார் 24,000 தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X