2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

எயார் ஏசியாவின் இலங்கைக்கான விமான சேவைகள் செப்டெம்பர் 28 முதல் மீள ஆரம்பம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் பட்ஜெட் விமான சேவை வழங்குநரான எயார் ஏசியா எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி முதல் இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
மாலைதீவுகளின், மாலே விமான நிலையத்தினூடாக இந்த சேவைகள் இலங்கைக்கு மேற்கொள்ளப்படவுள்ளன. 
 
கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கைக்கான சேவைகளை எயார் ஏசியா விமான சேவை இடைநிறுத்தியிருந்தது. மலேசியாவுக்கும், இலங்கைக்கும் காணப்படும் விமான பயண தூரமான 3.5 மணித்தியாலங்கள் தமது பயண சேவைக்கு பொருத்தமானதாக காணப்படாததன் காரணமாக இந்த தீர்மானத்தை தமக்கு மேற்கொள்ள நேரிட்டதாக எயார் ஏசியா அறிவித்திருந்தது.
 
தற்போது மாலே விமான நிலையத்தில் தரித்து, தமது பயணத்தை மேற்கொள்ளவுள்ளமையால், இந்த சேவை தொடரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எயார் ஏசியா குறிப்பிட்டுள்ளது.
 
பொதிகள் மற்றும் உணவு கட்டணமின்றி, எயார் ஏசியா கொழும்பு – கோலாலம்பூர் பயணச்சீட்டுக்கு 11,352 ரூபாவையும், மீள திரும்பல்களுக்கு 9,285 ரூபாவையும் அறவிடுவதாக அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .