2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

எக்ஸ்போ ஃபிரயிட் மற்றும் எக்ஸ்போலங்கா லிமிடெட் நிறுவனங்களுக்கு 3 விருதுகள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனங்களான எக்ஸ்போலங்கா ஃபிரயிட் (EFL) மற்றும் எக்ஸ்போலங்கா (பிரைவேற்) லிமிடெட் ஆகியவற்றுக்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் (NCE) 21ஆவது விருதுகள் வழங்கும் வைபவத்தில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
 
எக்ஸ்போலங்கா ஃபிரயிட் (EFL) மிகச்சிறந்த ஏற்றுமதியாளர் – ஏற்றுமதியாளர்களுக்கான சேவை வழங்குநர் பிரிவில் தங்க விருது மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான சேவை வழங்குநர் 'மிகப்பெரிய பிரிவு' தங்க விருதையும் வென்றிருந்தது. கடந்த ஆண்டு இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, இந்த பிரிவுகளில் வெள்ளி விருதையும், அதற்கு முன்னைய ஆண்டில் வெண்கல விருதையும் எக்ஸ்போலங்கா ஃபிரயிட் நிறுவனம் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எக்ஸ்போலங்கா ஃபிரயிட் (EFL), ஐயுவுயுவின் ஆசியா, ஆபிரிக்கர், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான முன்னணி முகவராக இயங்கி வருகிறது. 16க்கும் மேற்பட்ட நாடுகளில் 45 நகரங்களில் 1200க்கும் அதிகமான ஊழியர்களை தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் எக்ஸ்போலங்கா ஃபிரயிட் (EFL), சரக்கு கையாள்கை மற்றும் போக்குவரத்து துறையில் உறுதியான தடத்தை பதித்துள்ளது. ஆகாய மற்றும் கடல் மார்க்கமான சரக்கு போக்குவரத்து கையாளல்களில் நிறுவனம் பின்பற்றும் நெகிழ்ச்சித்தன்மையான தீர்வுகள், கொள்கை ரீதியான சென்றடைவு மற்றும் நிலையாண்மை மற்றும் பன்முக போக்குவரத்து கையாளல் மூலங்கள் போன்றன எக்ஸ்போலங்கா ஃபிரயிட் (EFL) நிறுவனத்தை பிராந்தியத்தில் உறுதியான மாபெரும் ஆகாய மற்றும் கடல் மார்க்க சேவை வழங்குநராக நிலைநிறுத்தியுள்ளன. விரைவில் பழுதடையும் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், தொலைத்தொடர்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள், சரக்குத்திட்டம், இயந்திரங்கள் மற்றும் மருந்துகள் போக்குவரத்தை உடனுக்குடன் கையாளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஆடைதொழில்துறை மற்றும் அழகுசாதனப்பொருட்களின் போக்குவரத்து நிபுணராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பாக எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜகத் பத்திரன கருத்து தெரிவிக்கையில், 'தொடர்ச்சியான மூன்று வருடங்களாக நாம் இந்த விருதுகளை வென்றுள்ளமை மிகவும் பெருமையளிக்கிறது. எமக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கும், சேவை வழங்குநர்கள், பங்காளர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் எமது அணியினர் ஆகியோருக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையிலிருந்து ஆரம்பித்த எமது சேவைகள், சர்வதேச தேசிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டு தற்போது 10க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை கொண்டமைந்துள்ளது. உள்நாட்டு துறைகளுக்கு மாத்திரம் சரக்கு கையாளல் சேவைகளை வழங்காமல், சர்வதேச செயற்பாடுகளின் மூலமாக பெறுமதி வாய்ந்த வெளிநாட்டு செலாவணியையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இந்த விருதுகள் எமக்கு மேலும் ஊக்கமளித்து, இந்த துறையில் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும்' என்றார்.
 
1978ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட எக்ஸ்போலங்கா லிமிடெட் நிறுவனம், இலங்கையின் முன்னணி பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக திகழ்கிறது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்நிறுவனம் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய – தெங்கு உற்பத்திகளுக்கான மிகப்பெரிய பிரிவில் வெண்கல விருதை தனதாக்கியிருந்தது. மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் சிறப்பான பிரசன்னத்தை எக்ஸ்போலங்கா பிரைவேற் லிமிடெட் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உற்பத்திகளின் இலங்கையின் மிகப்பெரும் ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது.
 
இந்த விருது குறித்து எக்ஸ்போலங்கா லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அன்னாம் கருத்து தெரிவிக்கையில், 'இந்த விருதை பெற்றுக்கொண்டமையையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். உள்நாட்டு துறையை மேம்படுத்துவதில் நாம் எப்போதும் அதிகளவு அக்கறை செலுத்தி வருகிறோம். எமது உற்பத்திகளை சர்வதேச நாடுகளுக்கு கொண்டு செல்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த விருது எமது செயற்பாடுகளுக்கு சிறந்த கௌரவிப்பாக அமைந்துள்ளது' என்றார்.
 
எக்ஸ்போலங்கா (பிரைவேற்) லிமிடெட் நிறுவனம், ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் மிகப்பெரிய பிரிவில் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய பொருட்களுக்கான தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளன தங்க விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனம் சிறந்த அர்ப்பணிப்புடைய ஏற்றுமதி நிறுவனம் எனும் மதிப்பையும் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .