2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மென்பொருள் அபிவிருத்தி துறையில் இலங்கையின் எதிர்காலத்துக்கு வலுச்சேர்க்கும் 99X Technology

A.P.Mathan   / 2014 மார்ச் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


மென்பொருள் அபிவிருத்தி செயற்பாடு என்பது சர்வதேச ரீதியில் 'Agile' எனும் முறையின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை எதிர்கொண்டவண்ணமுள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு மாற்றீடான திட்ட முகாமைத்துவ முறையானது, இலங்கையை சேர்ந்த சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளது.

தொழில்துறையில் பிரவேசிக்கும் முன்னர் இந்த அடிப்படை நுட்ப முறைகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் பற்றி 99X Technology நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை (NSBM) உடன் இணைந்து 'Towards Agile’ எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

Agile மென்பொருள் அபிவிருத்தி கட்டமைப்பு என்பது உலகளாவிய ரீதியில் இன்றைய கால கட்டத்தில் பெருமளவில் உபயோகிக்கப்படும் முறையாக அமைந்துள்ளது. Agile குறித்த அடிப்படை விடயங்களை கம்பனியின் அனுபவம் வாய்ந்த குழுவினர், பங்குபற்றுநர்களுக்கு விளக்கமளித்திருந்தனர். அத்துடன், நாளாந்த செயற்பாடுகளில் இவற்றின் பயன்பாடு பற்றியும் விளக்கமளித்திருந்தனர். இவர்கள் Scrum எனும் முறையை அதிகளவு பிரயோகித்திருந்தனர். Agile ஐ அறிமுகம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும், பிரபல்யமானதுமான முறையாக இது அமைந்துள்ளது. இலங்கையில் 99X Technology மூலம் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

விறுவிறுப்பானதும், மகிழ்ச்சியூட்டும் செயற்பாடுகளையும் கொண்ட இந்த செயலமர்வில் 99X Technology நிறுவனத்தைச் சேர்ந்த அணியினர் பங்குபற்றுநர்களுக்கு செயற்பாட்டு முறைகளை தெளிவாக விளக்கமளித்திருந்தனர். அத்துடன், பாரம்பரிய அபிவிருத்தி முறைகளுக்கும் Agile Scrum முறைகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் பற்றி தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தனர். மேலும், செயலமர்வின் போது பங்குபற்றியவர்கள் வினா விடை நேரத்தின் போது, தமது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

இந்த செயலமர்வு 99X Technologyஇன் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் பகுதியான 'Dotitude' மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரிவின் பிரதான நோக்கம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவசியமான ஆளுமைகள், வாய்ப்புகள் மற்றும் அனுபவத்தை தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இதற்காக தொழிற்துறைக்கும் பல்கலைக்கழக கல்வி கட்டமைப்புக்கும் இடையில் கட்டமைப்பிலான ஒன்றிணைவை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

இந்த முறை என்பது வெவ்வேறு பல முறைகளின் மூலமாக முன்னெடுக்கப்படுகிறது. மூன்று மாத காலம் முதல், ஒரு வருட காலம் வரையிலான விரிவுரைகள் கம்பனியின் ஊழியர்களின் மூலம் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. இதில் பல்கலைக்கழக பாடவிதானத்துக்கு அமைவாக விரிவுரைகளை வழங்கல், செயலமர்வுகளையும் பாடநெறிகளையும் வௌ;வேறு பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வியகங்களிலும் முன்னெடுப்பதுடன், மாணவர்களை கம்பனி வளாகத்துக்கு அழைத்து கல்விசார் சுற்றுலாக்களை வழங்குவது போன்றன இதில் உள்ளடங்குகின்றன.

Agile Scrum இலங்கையில் நிறுவப்பட்டது முதல், பல்வேறு விதமான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் காலாகாலமாக மேம்படுத்துவதில் 99X Technology ஈடுபட்டு வருகிறது. இதில் 2012 இல் தாபிக்கப்பட்ட கொழும்பு Agile Camps மற்றும் 2013 இல் இடம்பெற்ற Agile Conference என்பன இதில் உள்ளடங்கியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற முதலாவது Agile Conference ஆக இது அமைந்திருந்தது.

99X Technology என்பது மென்பொருள் பொறியியல் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் காணப்படும் சுயாதீன மென்பொருள் வழங்குநர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஐரோப்பிய பகுதியில் அதிகளவு வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்நிறுவனம், நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரிலும் காரியாலயத்தை கொண்டுள்ளது. இது வரையில் 150க்கும் மேற்பட்ட உயர்தரம் வாய்ந்த வர்த்தக மென்பொருட்களை விநியோகித்துள்ளது. 2013ஆம் ஆண்டில் 99X Technology நிறுவனம் இலங்கையில் தொழில்புரிய சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X