2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையில் புதிய விநியோக நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்யும் Ford

A.P.Mathan   / 2014 ஜூன் 12 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் கொண்ட தனது விநியோக காட்சியறை, விற்பனை மற்றும் சேவை நிலையத்தை Ford மோட்டர் கம்பனி அண்மையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற நிறுவனத்தின் உள்நாட்டு பிரசன்னத்தை மேலும் உறுதி செய்துள்ளது.

புதிய 6000 சதுர அடிப்பரப்பிலமைந்த இந்த காட்சியறையானது, 12 வாகனங்களை காட்சிப்படுத்தக்கூடிய காட்சியறை மற்றும் 14 வாகனங்களை சேவைக்குட்படுத்தக்கூடிய சேவைப்பிரிவு ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கொண்டுள்ளது. முழுமையான சேவை வசதி என்பது வாடிக்கையாளரை கவனத்தில் கொண்டு, இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் வாகன சந்தையையும் கருத்தில் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Ford கொழும்பு காட்சியறை என்பது Denzil கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை எனும் பகுதியில் அமைந்துள்ளது.

Ford மோட்டர் கம்பனியின் ஆசிய பசுபிக் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான முகாமைத்துவ பணிப்பாளர் டேவிட் வெஸ்டர்மன் கருத்து தெரிவிக்கையில், 'எமது பங்காளரான ஃபியுச்சர் ஒடொமொபைல்ஸ் உடன் இணைந்து, இந்த புதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் இலங்கையைச் சேர்ந்த Ford வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்' என்றார்.

'இந்த நிலையத்தின் ஒவ்வொரு குறிக்கோள் என்பதும், ஒப்பற்ற வாடிக்கையாளர் மற்றும் உரிமையாண்மை அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், வசதி, சௌகர்யம் சிக்கனம் ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் Fordஇன் பிரசன்னத்தை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த புதிய நிலையத்தின் அங்குரார்ப்பணம் அமைந்திருக்கும், இலங்கையில் தொடர்ந்து சர்வதேச புகழ்பெற்ற Ford வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றமையால், விற்பனைக்கு பிந்திய ஒப்பற்ற சேவையை வழங்க வேண்டியதன் தேவையும் அதிகளவில் காணப்படுகின்றது. 

கொழும்புக்கு வெளியேயும் தனது சேவை வலையமைப்பை விஸ்தரிக்க Ford திட்டமிட்டுள்ளது. இதற்காக நான்கு மேலதிக சேவை நிலையங்களை நிறுவ Ford திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் Ford வாகன உரிமையாளர்களுக்கு நாடு முழுவதும் சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவுள்ளது.

மேலதிகமாக, Ford தற்போது 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் பதிவு செய்யும் அதிகளவான விஸ்தரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்த வண்ணமுள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் 60 – 70 வீத வளர்ச்சியை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள 3S வசதி என்பது, Ford மோட்டர் கம்பனியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடுமையான விஸ்தரிப்பு திட்டத்துக்கு அமைவாக கொண்டுள்ளது, இது பிராந்தியத்தில் மேலும் வளர்ச்சி வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்திருக்கும் என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது' என வெஸ்டர்மன் அறிவித்திருந்தார். 







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X