
நுகேகொட சேஜிஸ் கெம்பஸ் இல் இடம்பெற்ற INSPIRO பிஸ்னஸ் ஸ்கூலின் இணையத்தளம், இலச்சினை மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினரையும் அறிமுகம் செய்யும் நிகழ்வின் பிரதம அதிதியாக CA ஸ்ரீலங்காவின் தலைவர் அர்ஜுன ஹேரத் கலந்து கொண்டிருந்தார். INSPIRO பிஸ்னஸ் ஸ்கூலின் தலைவர் பண்டார திசாநாயக்க மற்றும் சபையவர்களின் முன்னிலையில் பாடசாலையின் புதிய இலச்சினையை அர்ஜுன ஹேரத் அவர்கள் அறிமுகம் செய்திருந்தார். வகுப்பறைகளுக்கும் ஏனைய வசதிகளையும் பார்வையிடும் வகையில் நிகழ்வில் பங்குபற்றியிருந்த அனைவரும் பாடசாலை வளாகத்தினுள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
INSPIRO பிஸ்னஸ் ஸ்கூலின் தலைவர் பண்டார திசாநாயக்க தனது அறிமுக உரையில், 'கடந்த 20 ஆண்டு காலமாக மாணவர்களுக்கு க.பொ.த உயர் தர பாடங்களை கற்பித்து வருகிறேன். உயர்தரப்பரீட்சையில் சித்தியடையும் சகல மாணவர்களுக்கும் அரசாங்க பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைப்பதில்லை என்பதையும் நான் அறிவேன். இதன் காரணமாக, பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த பெருமளவான திறமையான மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர்வதற்கு பொருத்தமான வாய்ப்புகளை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். இந்த தேவையை கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் நான் SIBT கல்வியகத்தை அறிமுகம் செய்திருந்தேன். இதன் மூலம் விசேட தொழில் சார்பான கணனியியல் டிப்ளோமா கற்கைகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம். பின்னர், 2012 ஆம் ஆண்டில், நான் சேஜிஸ் கம்பஸ் இனை ஆரம்பித்திருந்தேன். இதன் மூலம் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பட்டத்தை, சகாய விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பட்டைய கணக்காளர் தகைமைகளுக்காக எனக்கு பல்வேறு வகையான கோரிக்கைகள் கிடைத்திருந்தது. ஆனாலும், நான் வகுப்புகளை ஆரம்பிக்கவில்லை, ஏனெனில் என்னிடம் சிறந்த ஆளுமை பொருந்திய விரிவுரையாளர்கள் குழுவினர் காணப்படவில்லை. ஆனாலும், இந்த வருடம் நாம் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக உள்ளோம். பல வருடங்கள் பட்டைய கணக்காளர் கற்கைகளுக்கான விரிவுரைகளை வழங்கிய அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களை என்னால் இனங்காண முடிந்திருந்தது. மேலும், நவீன வசதிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் பட்டைய கணக்காளர்களுக்கான தகைமைகளை இலகுவான முறையில் பெற்றுக் கொடுக்க முடியும். இந்த சகலவிதமான சாதகமான சூழலுடன் பட்டைய கணக்காளர்களுக்கான கற்கைகளை இந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து சேஜிஸ் கம்பஸில் ஆரம்பிக்க நான் தீர்மானித்தேன். மாணவர்களுக்கு புதுவித அனுபவத்தை பெற்றுக் கொடுக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம்' என்றார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக பங்குபற்றியிருந்த CA ஸ்ரீலங்காவின் தலைவர் அர்ஜுன ஹேரத் கருத்து தெரிவிக்கையில், 'இந்த நிகழ்வுடன் கைகோர்த்துள்ளமை என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. CA ஸ்ரீலங்காவில் பதிவு செய்யப்பட்ட கற்கைகளை வழங்கும் கல்வியகமாக ஐnளிசைழ பிஸ்னஸ் ஸ்கூலை வரவேற்கிறேன். இந்த பாடசாலையில் காணப்படும் நவீன வசதிகள் சர்வதேச தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. 2015 ஆம் ஆண்டு முதல் நாம் CA ஸ்ரீலங்காவில் புதிய பாடவிதானத்தை அறிமுகம் செய்யவுள்ளோம். வர்த்தக சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த பாடவிதானம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய பாடவிதானத்துக்கு அமைய, நாம் எமது பரீட்சை முறைகளையும் மெருகேற்றியுள்ளோம். எனவே, எமது பரீட்சைகளில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். எமது எதிர்கால பட்டைய கணக்காளர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சிறந்த எதிர்காலத்தை கொண்டிருப்பார்கள். Inspiro வர்த்தக பாடசாலைகளின் செயற்பாடுகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்' என்றார். தனது உரையின் பின்னர், ஏற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய, Inspiro பிஸ்னஸ் ஸ்கூலின் இணையத்தளத்தை ஹேரத் அறிமுகம் செய்திருந்தார்.
நிகழ்வின் விசேட அதிதியாக பங்கேற்றிருந்த பேராசிரியர் எம்.டபிள்யு விக்ரமாரச்சி கருத்து வெளியிடுகையில், 'ஐnளிசைழ பிஸ்னஸ் ஸ்கூலின் விரிவுரையாளர் CA ஸ்ரீலங்காவின் புதிய கல்வித்திட்டத்தை போதிக்கக்கூடிய போதியளவு ஆளுமைகளையும், திறமைகளையும் கொண்டவர்களாக திகழ்கின்றனர்' என்றார். விரிவுரையாளர்கள் குழுவினரை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியிருந்தன ஹேஷான் குருப்பு, சபையவர்களுக்கு முழு விரிவுரையாளர்கள் குழுவினரையும் அறிமுகம் செய்திருந்தார்.