2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வருடாந்த வணிகர் மாநாட்டில் உயர் சாதனையாளர்களை கௌரவித்தது JKOA

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஒட்டோமேஷன் நிறுவனமானது (JKOA), அண்மையில் நடைபெற்ற வருடாந்த வணிகர் மாநாட்டில் 2012/13 ஆண்டுக்கான விற்பனையாளர்களின் சாதனைகளை கௌரவித்தது. இவ் விருது வழங்கும் நிகழ்வில் விற்பனை, சந்தை வாய்ப்பு, வியாபார அபிவிருத்தி மற்றும் வருடாந்த வளர்ச்சி போன்ற பிரிவுகளில் சாதனை புரிந்த நாடுபூராகவும் உள்ள சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இக் கோலாகலமான நிகழ்ச்சியானது வெகுமதி வழங்கல் மற்றும் விற்பனையாளர் வலையமைப்பினை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த JKOA நிறுவனத்தின் IT பிரிவின் நிர்வாக துணை தலைவர் சுஜீவ தேவராஜா, 'நமது விற்பனையாளர் வலையமைப்பின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புகளே எமது வெற்றிக்கு காரணமாகும். எனவே தான், சிறந்த செயல்பாட்டினை அடையாளப்படுத்தும் இவ் வருடாந்த வணிகர் மாநாடானது எமது நாட்காட்டியில் மிக முக்கிய நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
 
சிறப்பாக செயலாற்றிய விற்பனையாளர் பிரிவில் பாங்கொக் சுற்றுப் பயணத்திற்கான வாய்ப்பினை அநுராதபுரம் வனோஜ் ஒஃபிஸ் ஒட்டோமேஷன் குழுவினர் வென்றதுடன், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே நீர்கொழும்பு ஏ.எம்.டபிள்யு.கம்ப்யூட்டர்ஸ் மற்றும் குருநாகல் கே.டி..ஒஃபிஸ் ஒட்டோமேஷன் ஆகியன வென்றன.
 
மேலும் இரண்டாம் வரிசை பிரிவில், மட்டக்களப்பு ஜிலான்ஸ் டெக்னோ இரண்டாம் இடத்தினையும், வெற்றியாளராக பொலன்னறுவை எம்.என்.ஒஃபிஸ் ஒட்டோமேஷன் போன்றன தெரிவு செய்யப்பட்டன. பாங்கொக் சுற்றுப் பயணத்திற்கான வாய்ப்பினையும், வெற்றிக் கிண்ணத்தையும் எம்.என்.ஒஃபிஸ் ஒட்டோமேஷன் குழுவினர் பெற்றனர்.
 
மேலும் உயர் வருமான உற்பத்தியாளருக்கான விருதினை மாலைதீவு கொபியர் ப்ளஸ் (பிரைவட்) லிமிடெட்டிற்கும், சிறந்த விநியோகத்தர் காட்சியறைக்கான விருதினை குருநாகல் கே.டி. ஒஃபிஸ் ஒட்டோமேஷன் குழுவிற்கும் வழங்கப்பட்டது. 
 
நாடுபூராகவும் உள்ள விற்பனையாளர்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து JKOA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜனொட தொரணாய கருத்து தெரிவிக்கையில், 'எமது வெற்றிக்கு விற்பனையாளர் வலையமைப்பே காரணமாகும். அவர்களின் சிறப்பான விற்பனை சாதனைகளே எமது நிறுவனத்தின் வர்த்தகநாம மதிப்பின் வளர்ச்சிக்கு காரணமாகும். உரிய நேரத்தில் வெகுமதிகள் வழங்கல் மற்றும் அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்களின் தனிச்சிறப்பு மிக்க தரத்தினை ஊக்குவிப்பதாக அமையும்' என்றார்.
 
தயாரிப்புக்கள் பிரிவில் சிறந்த விற்பனையாளர் விருதினை Toshiba Digital Copiersகளுக்காக அநுராதபுரம் எம்.என்.ஒஃபிஸ் ஒட்டோமேஷன், Toshiba Notebooksகளுக்கு கண்டி த ஒஃபீஸ் ஷொப் (பிரைவட்) லிமிடெட், Riso Digital Duplicators போன்றவற்றிற்கு குருநாகல் கே.டி.ஒஃபீஸ் ஒட்டோமேஷன் நிறுவனம், Hitachi Multimedia Projectors போன்றவற்றிற்கு அநுராதபுரம் வனோஜ் ஒஃபீஸ் ஒட்டோமேஷன் போன்றன வெற்றி பெற்றன. டொஷிபா நோட்புக் இன் சிறந்த விற்பனையாருக்கு டொஷிபா நோட்புக்கும், இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
 
JKOA ஆனது வணிகத்தில் பணியிட தன்னியக்க தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்வதுடன், சர்வதேச ரீதியில் நன்கறியப்பட்ட வர்த்தகநாமங்களுக்காக இலங்கையில் அனுமதி பெற்ற விற்பனை முகவராக செயற்படுகிறது. இந் நிறுவனமானது ஜான் கீல்ஸ் ஹோல்டிங் PLC நிறுவனத்தின் துணைக் கம்பனியாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .