2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாபெரும் நிகழ்வில் தமது விற்பனை குழுவை கௌரவித்தது Pureit

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உள்ளக நீர் தூய்மையாக்கி வர்த்தகநாமமான Pureit ஆனது, புது வருடத்தினை கோலாகலமான நிகழ்வுடன் ஆரம்பித்து வைத்தது. 200 இற்கும் மேற்பட்ட விற்பனை குழுவினர் பங்குபற்றிய இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் அர்ஜுன ரணதுங்க முக்கிய உரையாற்றியிருந்தார்.

கிரிக்கெட் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற மாபெரும் நிகழ்வினை Pureit வர்த்தகநாமத்தின் வியாபாரப் பிரிவின் தலைவர் ஷானக வதுராகல அவர்கள் 2014 ஆம் ஆண்டின் திட்டங்கள் குறித்த தகவல்களுடன் ஆரம்பித்து வைத்தார். மேலும் இந் நிகழ்வில் யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் சாஸியா சயீட், தனிநபர் பராமரிப்பு மற்றும் நீர் பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சித்தார்த் பெனர்ஜி, விற்பனை பணிப்பாளர் சுரித் பெரேரா ஆகியோர் கலந்து கொணடிருந்தனர்.

2013 ஆண்டில் அனைத்து பியூரிட் நீர் நிபுணர்கள் மத்தியிலும் அதிகூடிய விற்பனையை நிலைநாட்டிய கடவத்த அணுமின் என்டர்பிரைஸைச் சேர்ந்த ஜி.டி.சுஜித் பிரியங்கரவிற்கு நட்சத்திர விருது வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு பியூரிட் குழுவுடன் இணைந்து கொண்ட சுஜித் பிரியங்கர அதியுயர் விற்பனையை பதிவு செய்து ஒரு பங்காளராக வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு வழங்கிய பங்களிப்பை அடையாளப்படுத்தும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

'ஒவ்வொரு ஆண்டும் நாம் எமது விற்பனை குழுவினரின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளை அடையாளப்படுத்துகிறோம். இந்த வருடம் நடைபெறும் மாநாட்டில் சந்தையிலுள்ள எமது எதிர்கால திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளை தெளிவுபடுத்தியமை விசேட நிகழ்வாக அமைந்திருந்தது. எமது நீர் வணிகத்தின் முதுகெலும்பாக உள்ள விற்பனை குழுவினர் அதியுயர் திறமையை வெளிப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கான செயற்பாடுகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்' என பியூரிட் வர்த்தகநாம முகாமையாளர் ரொவினி இலுக்கும்புரா தெரிவித்தார்.

உயர் தரத்தில் பியூரிட் சேவையை வழங்கும் நோக்கிலமைந்த புரட்சிகரமான தயாரிப்பான ''Pureit Ultima Reverse Osmosis (RO) 418'' அறிமுகம் செய்யப்பட்டு அர்ஜுன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இத் தயாரிப்பு 'Pureit Ultima RO 418' தொழில்நுட்பத்தில் reverse osmosis(RO) இல் இயங்குவதுடன், கடின நீரிலுள்ள arsenic, கட்மியம், கடின உலோகங்கள் மற்றும் தீங்கிழைக்கும் பக்றீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நீக்கி தூய்மையாக்குகிறது. இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் கடின நீர் உள்ளதுடன், RO தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரின் கடினத்தன்மை நீக்கப்பட்டு, பாதுகாப்பான குடிநீர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந் நிகழ்வில் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சித்தார்த் பெனர்ஜி கருத்து தெரிவிக்கையில், 'Pureit இன் புதிய கண்டுபிடிப்பான Ultima RO தொழில்நுட்பம் இலங்கை வியாபாரத்துடன் இணைந்து கொண்ட முக்கிய அம்சமாகும். கடின நீருள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களைச் சென்றடைய முடியும்' என தெரிவித்தார். 

இந் நிகழ்வில் சிறந்த கண்காணிப்பாளர் விருது மட்டக்களப்பு வேல்முருகன் ஸ்டோர்ஸ் ஐ சேர்ந்த எம்.எச்.அல்ஹஜ் அவர்களிற்கும், சிறந்த சேவை பியூரிட் நீர் நிபுணர் விருது தெஹிவளை தில்ஷி என்டர்பிரைஸ்ஸைச் சேர்ந்த சுரங்க சொய்சா அவர்களுக்கும், 2013ஆம் ஆண்டிற்கான சிறந்த விற்பனை குழு விருது அரசுதுறை அணியை தலைமை தாங்கிய கமல் கலகே அவர்களிற்கும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .