2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மலேசியாவின் ஆக்சியாடா நிறுவனத்தின் இலங்கையில் முதலீடுகள் 1.5 பில். அமெரிக்க டொலர்கள்

A.P.Mathan   / 2013 ஜூலை 30 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் ஆக்சியாடா நிறுவனத்தின் மூலம் இலங்கையின் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளின் பெறுமதி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவுள்ளதென நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
அண்மையில் இலங்கை முதலீட்டு சபையுடன் மேற்கொண்டுள்ள 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஃபைபர் ஒப்டிக் வலையமைப்பு விஸ்தரிப்புக்கான முதலீட்டு உடன்படிக்கைக்கு அமைய  இந்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த பெறுமதி எய்தப்படவுள்ளது.
 
இலங்கையில் ஆக்சியாடா நிறுவனம், டயலொக் நிறுவனத்தின் உரிமையாண்மையை கொண்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய மொபைல் தொலைத்தொடர்பு வலையமைப்பை கொண்டுள்ளதுடன், நிலையான தொலைபேசி மற்றும் கட்டணம் செலுத்தி பார்வையிடும் தொலைக்காட்சி நாளிகை சேவைகளையும் வழங்கி வருகிறது.
 
இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்களாக ஆக்சியாடா நிறுவனம் திகழ்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .