2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பீப்பல்ஸ் லீசிங்கின் உலக சுற்றாடல் தினம் 2013 கொண்டாட்டங்கள்

A.P.Mathan   / 2013 ஜூன் 11 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


பண்டாரவளை கிளை நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு மர நாற்றுக்களை வழங்குவதை காணலாம்.

'மரங்களை நட்டு சூழலைப் பாதுகாப்போம்' என்ற தலைப்புக்கு அமைய உலக சுற்றாடல் தினமான ஜூன் 5ஆம் திகதி பீப்ல்ஸ் லீசிங் தனது 5 கிளை நிலையங்களில் மர நாற்றுக்கள் வழங்குவதற்கான நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகள் கொழும்பு மாநகரம் உட்பட காலி, யாழ்ப்பாணம், அம்பாறை, பண்டாரவளை ஆகிய இடங்களில் மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக சிறப்பாக நடைபெற்றது.
 
கொழும்பு மாநகர நிகழ்வில் கூட்டுறவு முகாமைத்துவ உறுப்பினர்களான காமினி சரத்- உப பொது முகாமையாளர்- சந்தைப்படுத்தலும் வியாபார அபிவிருத்தியும், நிமால் பெரேரா- பிரதம செயற்பாட்டு உத்தியோகத்தர்- பீப்பல்ஸ் காப்புறுதி நிறுவனம், அன்டி ரத்னாயக- சிரேஷ்ட முகாமையாளர்-இடர் முகாமைத்துவும் கட்டுப்பாடும், நந்தன வீரக்கொடி- முகாமையாளர் மாநகரக் கிளை, சிசிர கமகே-தலைமை முகாமையாளர் மாநகரக் கிளை பீ.எல்.சி பிரிவு ஆகியோர் பங்குபற்றினர். சூழல் பாதுகாப்பும் கழிவகற்றலுக்கான அறிவை மக்களிடையே மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு 100 மர நாற்றுக்களை வழங்கினர். சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் இலைக் கஞ்சி பரிமாறியமை 
குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறான நிகழ்ச்சிகள் ஏனைய கிளை நிறுவன வளாகங்களிலும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் மக்கள் வங்கி உத்தியோகத்தர்களும், அருகிலுள்ள பாடசாலை மாணவர்களும் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.

மாநகர கிளை நிகழ்வில் கூட்டுறவு முகாமைத்துவ உறுப்பினர்கள் பங்கேற்பதைக் காணலாம்.


அம்பாறை கிளை நிறுவனத்தினர் வேறாக்கப்பட்ட கழிவகற்றல் முறையை தமது நிறுவன வளாகத்தில் அறிமுகப்படுத்துவதைக் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .