19ஆவது சர்வதேச வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சீகிரிய அலிய ரெசோர்ட் அன்ட் ஸ்பா ஹோட்டலில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இதில் இலங்கை மற்றும் உலகம் முழுவதுமுள்ள சிரேஷ்ட விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்குபற்றவுள்ளனர். இந் நிகழ்வானது தெற்காசியாவிலேயே வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் மிகப் பழைமை வாய்ந்த கருத்தரங்காக திகழ்கிறது. இந் நிகழ்வானது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பீடத்தின் மூலம் ஆண்டுதோறும் ஒழுங்கு செய்யப்படுகிறது.
இலங்கையின் வனவியல் முதலீட்டு நிறுவனங்களில் சந்தை முன்னோடியாக விளங்கும் சதாஹரித பிளாண்டேஷன் கடந்த பல ஆண்டுகளாக இந்த பெருமைக்குரிய நிகழ்வுடன் பங்காளராக கைகோர்த்திருந்ததுடன், தொடர்ந்து இந்த ஆண்டும் இந்த கருத்தரங்கிற்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
சதாஹரித குழுமத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹண அவர்களுடனான நேர்காணலின் போது அவர் தெரிவித்ததாவது, சதாஹரித நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நவரத்னவின் தலைமையின் கீழ் தேசிய பசுமை விருதுகள் விழா 2012 இல் தங்க விருதையும் வென்றதன் மூலம்; சூழல் பாதுகாப்புக்கான சதாஹரிதவின் அர்ப்பணிப்பு நிரூபனம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பல்வேறு சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, சுற்றுச்சூழல் வளங்களை நட்புறவான முறையில் பராமரிப்பதற்கு ஆராய்ச்சி முடிவுகள் மிக அவசியமாகும். பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் ரீதியில், அறிவியல் கருத்துக்களத்திற்கு நிதிசார் வழிகாட்டல்களை வழங்க முடிந்துள்ளமை குறித்து சதாஹரித மிகவும் மகிழ்ச்சியடைகின்றது' என்றார்.
வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கின் தலைவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் சந்தனம் மற்றும் அகர்வூட் தொடர்பான முதன்மை ஆய்வாளருமான மருத்துவர்.உபுல் சுபசிங்க கருத்து தெரிவிக்கையில், 'ஆய்வாளர்களுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த தொழிற்துறை மூலம் வழங்கப்படும் ஆதரவுகள் உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளன. அக் கண்டுபிடிப்புகள் தொழிற்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மூலம் பொருளாதாரம் மற்றும் சூழல் நன்மைக்காக பயன்படுத்தப்படுகின்றன.
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.