2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அச்சுவேலி தொழிற்பேட்டையின் முதற்கட்ட செயற்பாடுகள் ஓகஸ்ட் 28இல் ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், அச்சுவேலி தொழிற்பேட்டையின் முதற்கட்ட செயற்பாடுகள் ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன. இதன் மூலம் 7,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த தொழிற்பேட்டையை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார். 
 
இந்த தொழிற்பேட்டைக்கான அடிப்படை வசதிகளான மின்சாரம், பரந்த வீதிகள், நீர் வடிகாலமைப்பு மற்றும் நீர் ஆகியவற்றை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எட்டு நிறுவனங்கள் இந்த தொழிற்பேட்டையில் தமது தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X