2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையின் முதலாவது முன்னெடுப்பாக செலான் வங்கியிடமிருந்து Flexi FD

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது Seylan Flexi FD எனும் தனது புதிய நிலையான வைப்புக் கணக்கை அறிமுகம் செய்வதன் மூலம், நிலையான வைப்புக்கள் தொடர்பான பாரம்பரிய எண்ணக்கருவுக்கு புதிய வாழ்வையும் அர்த்தத்தையும் வழங்குகின்றது. இது புதியதும் புரட்சிகரமானதுமான ஒரு சேமிப்பு வசதியாக அமைகின்றது. தமது முதலீட்டில் இருந்து மிக அதிகமான வருமானத்தை பெற்றுக் கொள்ளும் அதேவேளை, அந்த முதலீட்டை மேற்கொள்ளும் காலத்தை தீர்மானிக்கும் விடயத்தில் உயர்ந்தபட்ச நெகிழ்ச்சித் தன்மையையும் பெற எதிர்பார்க்கின்ற நபர்களை இது பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 
 
ரூபா 100,000 இனை ஆகக் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக தேவைப்படுத்துகின்ற Seylan Flexi FD ஆனது, ஆகக் கூடுதலாக ஒரு வருடம் வரையான எவ்வளவு காலத்தையும் தம்முடைய வைப்புக் காலமாக தெரிவு செய்து கொள்வதற்கான தனிச் சிறப்புமிக்க நெகிழ்ச்சித் தன்மையை முதலீட்டாளர்களுக்கு அளிக்கின்றது. இதற்கான வட்டி வீதமானது, முதலீடு மேற்கொள்ளப்படும் காலப்பகுதி மற்றும் முதிர்ச்சிக் காலத்தில் செலுத்த வேண்டியுள்ள தொகை ஆகியவற்றைப் பொறுத்து தயாரிக்கப்பட்ட 'கணிப்புமுறை அட்டை' (Rate Card) இன் அடிப்படையில்; வேறுபடும். 
 
செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் ரிலான் விஜயசேகர அவர்கள் கூறுகையில், 'நாம் நுகர்வோர் பற்றி மேற்கொண்ட முக்கிய உள்ளார்ந்த பார்வையின் பலனாக இந்த புதிய நிலையான வைப்புக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நபர்; ஒருவர் தனது முதலீட்டின் மூலம் அதிக வருமானத்தை உழைத்துக் கொள்கின்ற அதேநேரத்தில் தன்னுடைய நிதியினை முகாமைத்துவம் செய்யும் விடயத்தில் மேலும் நெகிழ்ச்சித் தன்மையானது இன்னும் நிவர்த்தி செய்யப்படாத தேவையாக காணப்படுவதை இப் பார்வை எமக்கு எடுத்துக் காட்டியது. ஒப்பீட்டளவில் குறுங்காலத்தில் மேலதிக நிதியை தம்வசம் கொண்டிருப்பதுடன் நெகிழ்ச்சித் தன்மையோடு அதிக வட்டி வருமானத்தை உழைத்துக் கொள்ளவும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் சொத்துக்கள் விற்பனைக்குப் பிறகு கையில் பணத்துடன் இருக்கின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னிடமுள்ள பணத்தை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பேணிக்கொள்ளும் தேவையுள்ள வாடிக்கையாளர்கள் போன்றோர்களுக்கு இந்த வைப்பு உதவுகின்றது' என்று தெரிவித்தார்.  
 
செலான் வங்கி பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு செயற்படுகின்றது. இவற்றுள் - தனிநபர் (சில்லறை) வாடிக்கையாளர்கள், நிதிய முகாமையாளர்கள், ரியல் எஸ்டேட் முகவர்கள் அதேபோன்று திறைசேரி முறிகள், REPOs ஒப்பந்தங்கள், பணிக்கொடை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) ஆகியவற்றில் முதலீடுகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் போன்றோர் உள்ளடங்குகின்றனர். அதுமட்டுமன்றி, காணிகளை கொள்வனவு, விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள், முதலீடு செய்யக்கூடிய நிதியை தம்வசம் வைத்திருக்கின்ற (high net worth) வாடிக்கையாளர்களும் இந்த வைப்பினால் விஷேடமாக கவர்ந்திழுக்கப்படுவர்.

 
'மனநிறைவைத் தரும் பல்வகை உற்பத்தி தெரிவுகளை தொடர்ச்சியாக புத்துருவாக்கம் செய்து சிறந்த பெறுமதியுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற 'அன்புடன் அரவணைக்கும் வங்கியாக' செலான் வங்கி திகழ்கின்றது. அந்த வகையில் 01 மாதம், 03 மாதங்கள், 06 மாதங்கள் அல்லது ஒரு வருடம் என முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கால வரையறையைக் கொண்ட முதலீடுகளுக்குப் பதிலாக வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டியவாறான முதலீட்டு காலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய நெகிழ்ச்சித் தன்மையை இது வழங்குகின்ற அதேநேரம், நிஜமான நிலையான வைப்பு வட்டி வீதங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் தமது முதலீட்டிலிருந்து அபூர்வமான பெறுமதியை பெற்றுக் கொள்வதையும் உறுதிப்படுத்துவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். மிக உயர்ந்த அளவிலான வருமானம் உழைக்கும் வாய்ப்புடன், முதலீட்டை மேற்கொள்ள வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் நாட்களின் விடயத்தில் பிரமாண்டமான பிரத்தியேகமாக்கும் வசதியை தன்னகத்தே கொண்ட ஒரு திட்டமாக இது காணப்படுகின்றது. எனவே இலங்கையின் வங்கியியல் துறையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறானதொரு முதலாவது முன்முயற்சியாக இது திகழ்கின்றது.' என்று திரு. ரிலான் விஜயசேகர அவர்கள் மேலும் குறிப்பிட்டார். 
 
Seylan Flexi FD ஆனது இன்னுமொரு படி மேலே சென்று, மிகக் குறைந்த வட்டி வீதத்தைக் கொண்ட இலவச உடனடி கடனட்டைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அதுமட்டுமன்றி, நபரொருவர் தன்னுடைய நிலையான வைப்பிற்கு எதிராக உடனடி கடனை தேர்ந்தெடுக்கும் வசதியும் இதில் காணப்படுகின்றது. 
 
இத்துறையில் முதன்முதலான அறிமுகமாக திகழ்கின்ற Seylan Flexi FD ஆனது தனது கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களின் மூலம் இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறையில் புரட்சிகர மாற்றமொன்றை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். 
 
முதலீட்டாளர் ஒருவர் 31 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையான கால வரையறையில் தமக்குப் பொருத்தமான காலத்தை மிகச் சரியாக (உதாரணமாக: 47 நாட்கள், 72 நாட்கள், 98 நாட்கள், 178 நாட்கள் என...) தெரிவு செய்து கொள்ள முடியும். அத்துடன் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்ற நிஜமான நிலையான வைப்பு வட்டி வீதத்துடன் ஒப்பிடக்கூடியதும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதுமான 'கணிப்புமுறை அட்டையின்' பிரகாரம், முதலீட்டின் மீதான வருமானத்தையும் நிர்ணயித்துக் கொள்ளலாம். இதற்கான வட்டித் தொகையை முதிர்ச்சிக் காலத்தின்போது பெற்றுக் கொள்ள முடியும். வாடிக்கையாளர் ஒருவர் விரும்பினால், பாரம்பரிய முதலீட்டு காலப்பகுதியின் அடிப்படையில் இன்னும் சில காலத்துக்கு மீள் முதலீடு செய்து கொள்ளலாம்;. வாடிக்கையாளர் ஒருவர் முதலீடு செய்ய விரும்புகின்ற மிகச் சரியான காலப்பகுதியை மீள் நிர்ணயம் செய்ய விரும்பினால், செலான் வங்கிக்கு விஜயம் செய்வதன் ஊடாக அதனையும் மேற்கொள்ள முடியும். 
 
செலான் வங்கி 25 வருட நிறைவை இவ்வாண்டு கொண்டாடுவதுடன், நாடெங்கும் 150 கிளைகள் என்ற தனது மைற்கல்லை அண்மையில் கடந்து சென்றிருக்கின்றது. இக்கிளைகள் அனைத்தும் உடனடி தொடர்பைக் கொண்டதாக இணைக்கப்பட்டுள்ள அதேநேரம், இலங்கை முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் பல்வகைப்பட்ட கணக்குகள் மற்றும் சேவைகளை தரப்படுத்தப்பட்ட சேவைகளுடன் இணைத்து வழங்குவதற்கு தயார் நிலையிலும் காணப்படுகின்றன. Seylan Flexi FD வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மேலும் வெகுமதியை வழங்கும் விதத்திலமைந்த ஒரு திட்டத்தின் முன்னெடுப்பாக காணப்படுகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .