
பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் இலங்கையின் முன்னணி பட்டமளிப்பு கல்வியகமான SLIITஉடன் இணைந்து வருடாந்த பல்ககைக்கழக ஒன்றுகூடல் தினத்தை செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளது. SLIIT மாலபே கம்பஸ் இல் இடம்பெறவுள்ள இந்த பல்கலைக்கழக தின நிகழ்வு காலை 8.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறும். இந்த பல்கலைக்கழக தினத்தின் போது பெற்றோர்கள் மற்றும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு SLIIT இன் வெளிநாட்டு பாடத்திட்டங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழக மாற்றல் வாய்ப்புகள், புலமைப்பரிசில்கள் மற்றும் வசதிகள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
'வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து SLIIT முன்னெடுக்கும் செயற்பாடுகளின் மூலமாக மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை முன்னெடுக்க பல்வேறு சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், இரண்டு வருடங்களின் பின்னர் வெவ்வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றம்பெற வசதிகளை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. எமது பங்காண்மை பல்கலைக்கழகங்கள் உயர்ந்த நிலையை கொண்டுள்ளன. சர்வதேச ரீதியில் உயர் தரம் வாய்ந்த கல்வியையும் வழங்கி வருகின்றனர்' என SLIITஇன் அதிபரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.
ஆர்வமுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் மேலதிக விபரங்களை www.sliit.lk எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது SLIIT இன் சர்வதேச தொடர்பு கொள்ளும் இலக்கமான 241 3900 உடன் தொடர்பை ஏற்படுத்தி அல்லது பங்காண்மை பல்கலைக்கழகத்துக்கு செப்டெம்பர் 26ஆம் திகதி விஜயம் செய்து பெறலாம்.