
நம் நாட்டு இளைய தலைமுறையினரின் இசைத் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் சிரச தொலைக்காட்சியால் நடாத்தப்படும் சிரச சூப்பர் ஸ்டார் சீசன் 06 இன் உத்தியோகப்பூர்வ காப்புறுதி பங்காளராக ஜனசக்தி நிறுவனம் இணைந்துள்ளது. இதன் ஓர் அங்கமாக, ஜனசக்தி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா மூலம் MTV/MBC நிறுவனத்தின் பணிப்பாளர் நேத்ரா விக்ரமசிங்கவிடம் அனுசரணை காசோலை கையளிக்கப்பட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் பல மில்லியன் கணக்கான ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக சிரச சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி விளங்குகிறது. கடந்த வருடம் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட துஷான் மதுசங்க ரூபா பத்து மில்லியன் பெறுமதியான பணப்பரிசிலினையும், அதேபோல காப்புறுதி திட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
இசைத்திறமை உள்ளவர்களுக்கு தங்களது கனவினை நனவாக்குவதற்கு, சர்வதேச மேடைகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை அமைத்துக் கொடுக்கும் சிரச சூப்பர் ஸ்டார் போன்ற நிகழ்ச்சிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக காப்புறுதி பங்காளராக இணைந்து கொண்டுள்ளமை குறித்து பெருமையடைகிறோம்' என ஜனசக்தி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை மக்களின் மனங்கவர்ந்த, சர்வதேச தரத்துடனான அடுத்த குரலுக்குரிய வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதே சிரச சூப்பர் ஸ்டார் சீசன் 06 இன் எதிர்பார்ப்பாகும்.
'நாடு பூராகவும் உள்ள இளம் திறமைகளுக்கு வாய்ப்பளித்து போட்டியாளர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான அடித்தளத்தை சிரச சூப்பர் ஸ்டார் அமைத்துக் கொடுத்துள்ளது. வாழ்வில் முன்னேறுவதற்கான பல்வேறு வாய்ப்புக்களை வழங்கி அதனூடாக இலங்கை இளைஞர்களின் திறமையை வளர்த்திடுவதில் ஜனசக்தி எந்நேரமும் முன்னிலையில் திகழ்கிறது. இலங்கையின் இளம் சமுதாயத்தினரிடம் அதிகாரத்தை கையளிப்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களுக்கான எமது ஆதரவினை விஸ்தரிக்கும் நோக்கிலும், எம் முயற்சிக்கு பெறுமதி சேர்க்கும் வகையிலும் நட்சத்திரங்களாக வர துடிக்கும் இளம் திறமைசாலிகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளோம். மேலும் கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவு வழங்குவதில் ஜனசக்தி எப்போதுமே முன்னணியில் விளங்கும்' என ஜனசக்தி காப்புறுதியின் சந்தைப்படுத்தல் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஷெனாலி விக்ரம ஆராச்சி தெரிவித்தார்.
'இலங்கையின் பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சியாக விளங்கும் சிரச சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியுடன் இணைந்துள்ளமையானது ஜனசக்தி நிறுவனத்திற்கு நிச்சயமாக பெருமைக்குரிய விடயமாகும். இந்த இணைப்பின் ஊடாக இளைஞர்களின் தன்னம்பிக்கையை கட்டியெழுப்பி அவர்களின் திறமையை ஊக்குவித்துக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
6ஆவது சீசனில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெறுபவருக்கு ஜனசக்தி காப்புறுதியின் 10 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதி திட்டமும், இரண்டாவது இடத்தை பெறுபவருக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதி திட்டமும் வழங்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக, 10 இறுதி போட்டியாளர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதி திட்டம் வழங்கப்படவுள்ளது. மிகப் பிரபலமான இந் நிகழ்ச்சியில் அஜித் பண்டார, பிரதீப் ரங்கன, ஷானிகா மதுமாலி மற்றும் திசேரா சானக இணைந்து கொள்கின்றனர்.