.jpg)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனம் 10.5 பில்லியன் ரூபாவை விட அதிகரிக்கும் என திறைசேரியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப கட்ட மதிப்பீடுகளில் அறியவந்துள்ளது.
ஆரம்பத்தில் அமைச்சுகளுக்கும், ஏனைய மறைமுக செலவீனங்களுமாக மொத்தமாக 2.5 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவினால் மேலும் 8 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், மொத்த செலவீனம் 10.5 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என தற்போது திறைசேரி மதிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறு செலவிடப்படும் தொகையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு 2015 ஆம் ஆண்டில் பாரிய பின்னடைவு ஏற்படும் என்பதுடன், எவ்விதமான அனுகூலங்களும் கிடைக்காது என பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அரசாங்க அச்சகத்தில் தேர்தலுக்கான புள்ளடித்தாள்கள் அச்சடிக்கும் செயற்பாட்டுக்காக மொத்தமாக 250 மில்லியன் ரூபா மற்றும் அச்சகத்துக்கு வலுப்பிறப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்து நிறுவுவதற்காக 1.5 மில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாகவும், இந்த செலவீனங்களும் 10.5 பில்லியன் ரூபாவில் உள்ளடங்கியுள்ளதாக அரச அச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.