2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 126 ஆக பதிவு

A.P.Mathan   / 2013 மார்ச் 13 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 125.95 – 126 ஆக நேற்றைய தினம் பதிவாகியிருந்ததென நாணய மாற்று முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 0.45 – 0.55 வரை உயர்வடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பெருமளவான வங்கிகள் தம்மிடம் கையிருப்பிலுள்ள வெளிநாட்டு நாணயங்களை ஸ்பொட் சந்தையில் மாற்றுவதற்கு ஆர்வம் தெரிவிக்கின்றன. இதனால் சந்தையில் குறுங்கால அடிப்படையில் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்த நிலையில் காணப்படுகிறது என நாணய மாற்று முகவர்கள் தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .