2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 130ஐ கடந்தது

A.P.Mathan   / 2013 ஜூன் 28 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றை நாணயப்பரிமாற்றல் நடவடிக்கைகளின் போது, 130ஐ விட அதிகரித்து 130.90 என பதிவாகியிருந்தது.
 
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பதிவாகிய வீழ்ச்சியான பெறுமதி இதுவென சந்தை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 
 
இந்த நிலை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து தெரிவிக்கையில், மக்கள் இது குறித்து நிலை குலையத் தேவையில்லை. உயர்ந்த விலையில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வோர் நஷ்டத்தை எதிர்நோக்குவார்கள். நேற்றைய தினம் கொடுக்கல் வாங்கல்களின் போது ரூபாவின் பெறுமதி 130.90 ஆக பதிவாகியிருந்தது என்றார்.
 
இந்த வார திறைசேரி கொடுக்கல் வாங்கல்களில் பெருமளவான முதலீட்டாளர்கள் நீண்ட கால முறிகளை விற்பனை செய்து குறுங்கால முறிகளில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு மொத்தம் 15 பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை இவர்கள் கொள்வனவு செய்திருந்தனர். 
 
பணச்சந்தையில் அதிகளவு திரள்வுத்தன்மை காணப்படுகின்றமையும், மத்திய வங்கியின் தலையீடு குறைந்தளவில் காணப்படுகின்றமையும் இந்த பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .