2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொதுநலவாய மாநாட்டின் மூலம் இலங்கை 2 பில். அமெரிக்க டொலர்களை முதலீடாக பெறும்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இலங்கைக்கு முதலீடாக கிடைக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பொதுநலவாய வர்த்தக சம்மேளனத்தின் தலைமை அதிகாரியான மோகன் கௌல் கருத்து தெரிவிக்கையில் விமானநிலையம், வலு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான பிரேரணைகள் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வர்த்தக மாநாட்டில் 65 நாடுகளைச் சேர்ந்த 450 வர்த்தக பிரதிநிதிகள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .