2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கை பட்டய கணக்காளர் கல்வியகத்தின் 22ஆவது தலைவராக அர்ஜுன ஹேரத் தெரிவு

A.P.Mathan   / 2014 ஜனவரி 22 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பட்டய கணக்காளர் கல்வியகத்தின் 22ஆவது தலைவராக பட்டய கணக்காளரான அர்ஜுன ஹேரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய தலைவர் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (21) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் கல்வியகத்தின் அங்கத்தவர்கள், வர்த்தக துறையை சேர்ந்த பிரமுகர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், கணக்காளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வொரன் அலன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
 
இலங்கை பட்டய கணக்காளர் கல்வியகத்தின் அங்கத்தவராக திகழும் இவர் கணக்கியல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தை கொண்டுள்ளார். 
 
இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு, மற்றும் இலங்கை கணக்கியல் மற்றும் தணிக்கை தரப்படுத்தல் மேற்பார்வையிடல் கழகத்தின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .