2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 3M நடத்திய பணியிட பாதுகாப்பு திட்டங்கள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


40 வருடகால பணியிட பாதுகாப்பு தலைமைத்துவத்தை கொண்ட 3M ஆனது, கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் 2ஆவது வாரத்தில் அமைச்சரவை பிரகடனப்படுத்திய தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களிற்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
 
இலங்கையை பொறுத்தவரை ஒரு வருடத்தில் சுமார் 1750 பணியிட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தொழில் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் பணியிட விபத்துக்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவே பதிவு செய்யப்படுகின்றன என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
தொழில்சார் நோய்கள் மற்றும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் வருடாந்த தேசிய பாதுகாப்பு மாநாடானது இம்மாதம் 9ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
 
'பணியிடத்தில் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து பெரும்பாலானோர் விழிப்புணர்வின்றி காணப்படுகின்றனர். தொழில்சார் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது குறிக்கோளாகும்' என தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலையத்தின் பொது பணிப்பாளர் டாக்டர் சம்பிக்க அமரசிங்க தெரிவித்தார்.
 
இந் நிகழ்வில் 3M கொரியன் புத்துருவாக்க மையத்தின் தனிநபர் பாதுகாப்பு பிரிவின் தொழில்நுட்ப சேவைகள் பொறியியலாளர் எச்.எம்.ஜங் விருந்தினராகவும், பேச்சாளராகவும் கலந்து கொண்டிருந்தார். இந் நிகழ்வில் அவர் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) குறித்து அதிக கவனம் செலுத்தியிருந்தார். மேலும் அவர் தனது தொழில்நுட்ப அறிவுடன் யளடிநளவழள குறித்த நடைமுறை வழக்குகள் குறித்து விவாதித்திருந்தார். இப்பகுதியில் உள்ள 3M இன் புத்தாக்க தீர்வுகள் குறித்தும் அவர் உரை நிகழ்த்தினார்.
 
'3M ஆனது கடந்த 40 வருடங்களாக பல புதுமைகளை புகுத்தி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தொழிற்துறைக்கு வழங்கி வருகின்றது. இதன் மூலம் நாம் உள்நாட்டு தொழிற்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்குகிறோம்' என 3M லங்காவின் துணை தலைவர் சுரேன் ராஜநாதன் தெரிவித்தார். 'இலங்கையில் பாதுகாப்பான கலாச்சாரத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காகும். எமது இலக்கினை வெற்றி கொள்வதற்கு பணியிடத்தில் காணப்படும் ஆபத்துக்கள் குறித்து வேலை வழங்குனர், மற்றும் பணியாளர்கள் இனங்காணும் வகையிலான பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் பணியிட பாதுகாப்பு குறித்த 3M இன் அர்ப்பணிப்பின் ஒரங்கமாக, எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டிலும் டாக்டர் ஜங் உரை நிகழ்த்தவுள்ளார்.
 
'உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4% வீதமானது பணியிட விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக குறைவடைந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2.3 மில்லியன் மக்கள் தொழில்சார் நோய்களினால் உயிரிழந்துள்ளனர். இது ஆபத்தின் மேலோட்டம் மாத்திரமே' என தொழில் திணைக்களத்தின் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் பிரதி ஆணையாளர் டாக்டர் வஜிர பாலிபனே தெரிவித்தார். 'நாம் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளைச் சேர்ந்த முகாமையாளர்கள் மத்தியில், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள சேவைகள் குறித்த விழிப்பூட்டல்களை ஏற்படுத்தி பணியிட விபத்துக்கள் மற்றும் நோய்களை தடுக்கவுள்ளோம். பணியிட பாதுகாப்பினை உறுதி செய்வது அரசு, வேலை வழங்குநர் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கிடையேயான முற்தரப்பு முயற்சியாக இருக்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார். மேலும் இந் நிகழ்வில் புகழ்பெற்ற பேராசிரியர் டேவிட் கோ பிரதான பேச்சாளராக விளங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .