2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிலோன் டொபாக்கோ கம்பனியிடமிருந்து அரசாங்கத்துக்கு ரூ.48.5 பில்லியன் வருமானம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 11 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் இலங்கை புகையிலை கம்பனியிடமிருந்து (சிலோன் டொபாக்கோ கம்பனி) 48.5 பில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்துக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக கம்பனி அறிவித்துள்ளது. இந்த பெறுமதி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 700 மில்லியன் ரூபா அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த காலப்பகுதியில் மொத்த புகையிலை தயாரிப்புகளின் விற்பனை 11 வீத சரிவை பதிவு செய்திருந்த போதிலும், இந்த வருமான அதிகரிப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கம்பனியின் வரிக்குப்பின்னரான இலாபம் 6.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. சாதாரண தயாரிப்புகளின் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருந்த போதிலும், உயர் ரக தயாரிப்பான டன்ஹில் விற்பனை அதிகரித்திருந்ததாக கம்பனி அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .