2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செலான் வங்கியின் பேஸ்புக் பக்கத்திற்கு 50,000 ரசிகர்கள்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கி பி.எல்.சி. தனது பேஸ்புக் பக்கத்தில் 50,000 'ரசிகர் அடையாளத்தை' (Fan’s Mark) அண்மையில் தம்வசப்படுத்தியுள்ளது. இதன்மூலம், இலங்கையில் இவ்வாறான மைற்கல் ஒன்றை அடைந்த ஒரேயொரு வங்கியாக முன்னேறியுள்ளது மட்டுமன்றி, சமூக ஊடகத் துறையில் மிகவும் செயற்றிறன்மிக்க இலங்கையின் வங்கியாகவும் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுள்ளது. 
 
செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) ரிலான் விஜயசேகர கூறுகையில், 'இலங்கையில் வாடிக்கையாளர்களைக் கவரும் விடயத்தில் தீவிரமானளவுக்கு குறை-மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு சாதனமாக சமூக ஊடகம் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டோம். எனவேதான் இலங்கையில் வங்கி மற்றும் சமூக ஊடகம் ஆகிய இரண்டு விடயங்களிலும் ஒரு வினையூக்கியாக திகழும் விதத்தில், வங்கியியல் துறையில் முன்னோடியான மற்றும் தலைமை வகிக்கும் பாத்திரமொன்றை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஊடக சாதனத்தை கையாள்வதில் நாம் நிலைபேறான ஓர் அணுகுமுறையை உருவாக்கி இருக்கின்ற அதேவேளை, சமூக ஊடகத்தில் வங்கியியல் துறை தொடர்பாக உலகளவில் அடையாளம் காணப்பட்ட தரமதிப்பீடுகளையும் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வருகின்றோம்' என்றார். 
 
பல்வகைப்பட்ட பாத்திரங்களை வகிக்கும் செலான் வங்கியின் பேஸ்புக் பக்கமானது வாடிக்கையாளர்களுடன் இடைத்தொடர்பினை பேணுவதுடன், வங்கியையும் அதனது பெருமளவிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளையும் ரசிகர்களின் விரல் நுணிக்கு நேரிடையாகவே கொண்டுசென்று சேர்க்கின்றது. தனது சமூக ஊடகம் தொடர்பான முன்னெடுப்புக்களின் வெற்றியை அளவிடுவதில் 'Likes' அல்லது ரசிகர்களின் எண்ணிக்கை என்பன முக்கியமான அடிப்படைகள் அல்ல. மாறாக அதற்குமப்பால், தற்போதைய வாடிக்கையாளர்களிடத்திலும் எதிர்காலத்தில் வாடிக்கையாளராகும் சாத்தியமுள்ள நபர்களுடனும் அது கொண்டுள்ள ஈடுபாடே வெற்றியை மதிப்பிடும் அடிப்படையாகும் என்று செலான் வங்கி நம்புகின்றது.
 
இதில் காணப்படும் 'செலான் வங்கி வாடிக்கையாளர் உதவி' தொடர்பிணைப்பு (Link) என்பது முக்கியமான வசதிகளுள் ஒன்றாகும். பேஸ்புக் ரசிகர்கள் செலான் வங்கியுடன் இடைத்தொடர்பை பேணிக் கொள்வதற்கான தனிச்சிறப்புமிக்க வாய்ப்பை இது அளிக்கின்றது. இந்த தொடர்பிணைப்பு ஆனது எந்த வகையான கேள்விகளையும் வரவேற்கின்றது. அந்தக் கேள்விகள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் பதில்கள் அளிக்கப்படுகின்றன. 
 
அதேநேரம், வங்கியின் தொழிற்பாடுகள் தொடர்பில் பேஸ்புக் ரசிகர்களுக்கு தொடர்ச்சியான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக – வங்கியின் உற்பத்தி மற்றும் சேவை அறிமுகங்கள், பெறுமதி சேர் சேவைகள், உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்கள், செய்திகள், கிளை திறப்பு போன்ற பல தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த பேஸ்புக் பக்கத்தை மேலும் இடைத்தொடர்பு கொண்டதாக மாற்றியமைக்கும் விதத்தில், உன்னதமான பரிசுகளை வெகுமதியாக வென்றுதரக்கூடிய போட்டிகளையும் இது நடாத்துகின்றது. இவ்வாறு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஊக்குவிப்புத் திட்டங்களுள் பெறுமதியை மதிப்பிடுதல் ஊக்குவிப்பு, விளம்பரப் பதாகை வடிவமைத்தல், விமானப் பயணச்சீட்டுக்களை வெல்லும் போட்டி மற்றும் 'பகிர்ந்து' – வெற்றி கொள்ளுங்கள் போன்றவையும் உள்ளடங்கும். 
 
செலான் வங்கியின் பேஸ்புக் பக்கமானது தனது மிகவுன்னத சமூக கடப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், ஒரு சமூக ஆர்வலரின் பாத்திரத்தை வகிக்கின்றது. அதேநேரம் புத்தூக்கமளிக்கும் நிகழ்ச்சிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் மற்றும் தேசிய, சர்வதேச நிகழ்வுகள் பற்றிய கருத்துக்களையும் ரசிகர்களுக்கு நாளாந்தம் இது வழங்கிக் கொண்டிருக்கின்றது. 
 
அதுமட்டுமன்றி, தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பயன்மிக்க உதவிக் குறிப்புக்கள் பலவற்றையும் இப்பக்கம் பதிவிடுகின்றது. அதாவது வீட்டினை செயற்றிறன் மிக்கதாக எவ்வாறு நடத்திச் செல்வது, எவ்வாறு பணத்தினை சேமிப்பது, சக்தி வளத்தை சேமிப்பதற்கான குறிப்புக்கள் போன்றவற்றையும் வீடுகளுக்கு அவசியமான மற்றும் ஏனைய விடயங்கள் பற்றிய பல உதவிக் குறிப்புக்களுமாக வெற்றிகரமான வாழ்க்கைமுறைக்கு வழிகாட்டும் குறிப்புக்களை இது வழங்குகின்றது.
 
'பாரம்பரிய ஊடகத்தை விடவும் மிகவும் இடைத்தொடர்புபட்டதும், வசீகரமானதுமான ஓர் ஊடக சாதனமாக திகழ்கின்ற சமூக ஊடகத்தின் (Social Media) முக்கியத்துவத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இது, மிக மிக செலவுச் சிக்கனமான தொலைத்தொடர்பாடல் கருவியாக தொழிற்படுகின்றது. அதுமாத்திரமன்றி பின்னூட்டல் கருத்துக்கள், ஆய்வு மற்றும் எண்ணங்கள் தோற்றம் பெறுகின்ற ஒரு பொறிமுறையாகவும் இது காணப்படுகின்றது. எமது உற்பத்திகள் சேவைகளுக்கு பெறுமதி சேர்க்கும் நடவடிக்கையின் போதும், கிளைகளில் எமது சேவைத் தராதரங்களை மேம்படுத்தும் நடைமுறையிலும், அதேபோன்று அண்மைக்காலத்தில் வணிக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும் - எமது சமூக ஊடக தளங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற கருத்துக்களை நாம் பயன்படுத்தியுள்ளோம். உண்மையிலேயே, இலங்கையில் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் ஆகிய இரண்டினதும் பரம்பலில் நாம் அவதானித்துள்ள அபரிமிதமான வளர்ச்சியை உரிய கவனத்தில் கொண்டு, இந்த சமூக ஊடக சாதனத்தில் நாம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளோம். அதேநேரம், மேலும் பல மனமகிழ்ச்சி அளிக்கும் போட்டித் திட்;டங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் பிரயோக மென்பொருட்கள் (Apps) போன்றவற்றையும் மிக விரைவில் அறிமுகம் செய்வதற்கு நாம் திட்டமிட்டிருக்கின்றோம். எமது தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களையும் ரசிகர்களையும் நிச்சயமாக மேலும் வசீகரிப்பனவாக இவை காணப்படும்' என்றும் விஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .