
உலகின் முன்னணி சரக்கியல் நிறுவனமான னுர்டு ஆனது, தமது நிறுவனத்தின் நடுநிலையான கார்பன் கப்பல் ஏற்றுமதி (carbon neutral shipment) தெரிவாகிய DHL GOGREEN இனை பயன்படுத்திய இலங்கை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு (Standard Chartered Bank) கார்பன் கிரடிட் சான்றிதழை வழங்கியுள்ளது. இவ்வகையான சான்றிதழை இலங்கையில் DHL நிறுவனத்திடமிருந்து பெறும் முதல் நிறுவனமாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி திகழ்கிறது.
DHL GOGREEN பொருட்கள் மற்றும் சேவைகளை ஊடாக கடந்த 2012ஆம் ஆண்டில் இலங்கை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியானது 5000Kg கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளது. Deutsche Post DHL கார்பன் மேலாண்மையானது போக்குவரத்தின் காரணமாக ஏற்படும் கரியமில வாயு உழிழ்வுகளை இந்தியாவின் biomass கட்டமைப்பு, பிரேசில் நீர் மின்சார நிலையம் மற்றும் சீனாவின் காற்றலை பண்ணை போன்ற காலநிலை பாதுகாப்பு திட்டங்கள் மூலம் ஈடுசெய்து வருகிறது.
இச் சான்றிதழ் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதான நிதி அதிகாரி நிஷானி ஆரியவன்ச, 'DHL இன் அங்கீகாரத்தை பெறும் முதல் நிறுவனம் எனும் ரீதியில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது வங்கியை பொறுத்த வரை எமது வர்த்தகநாம வாக்குறுதிகளை கூட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமன்றி அனைத்து சமூகத்தினருக்கும் வழங்க வேண்டும் என்பதையுணர்ந்து செயற்படுகிறோம். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்தல் மற்றும் சூழல் மீதான எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.
DHL அதிவேக தெற்காசிய அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி மல்கம் மொன்டேரோ கருத்து தெரிவிக்கையில், 'எமது பேண்தகைமை நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, சூழல் மீதான Logistic தாக்கத்தை குறைக்கும் நோக்கில் இயற்கை வளங்களின் பயன்பாட்டினை குறைத்து செயற்திறன் மிக்க போக்குவரத்தினை பயன்படுத்துவது குறித்து நாம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறோம். எனவே கரியமில உழிழ்கள் குறித்து கவனம் செலுத்தும் மதிப்புமிக்க வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியுடன் இணைந்துள்ளமை குறித்து பெருமையடைகிறோம். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி போன்ற நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் ஊடாக உலகளவில் பாதிப்புகளை குறைக்கும் புதிய வழிகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம்' என்றார்.
DHL GOGREEN உற்பத்தி மற்றும் சேவைகளை பயன்படுத்தும் DHL இன் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்தம் இச் சான்றிதழ்கள்; வழங்கப்படுகின்றன. இந்த GOGREEN சான்றிதழ் Deutsche Post DHL கார்பன் மேலாண்மையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், SGS இன் ஒப்புதலையும் பெற்றுள்ளது. கரியமில வாயு மேலாண்மை மற்றும் GOGREEN உற்பத்தி சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்களை www.dp-dhl.com/gogreen-projects எனும் இணையத்தள முகவரி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.