2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்காத 17 நிறுவனங்கள் மீறுவோர் பட்டியல் பலகையில் உள்ளடக்கம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குதாரர்களுக்கு 2012/13 நிதி ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை எனும் காரணத்துக்காக 17 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை மீறுவோர் பட்டியல் பலகையில் (Default Board) கொழும்பு பங்குச்சந்தை பட்டியலிட்டுள்ளது.
 
இந்த பலகை பங்குதாரர்களுக்கு நிதி அறிக்கைகளை வழங்காத நிறுவனங்களை பட்டியல்படுத்த பயன்படும் குறிகாட்டி பலகையாக அமைந்துள்ளதுடன், பங்குதாரர்களுக்கு அபாய சமிக்ஞைகளை வழங்குவதாகவும் காணப்படுகிறது.
 
பின்வரும் கம்பனிகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
 
ஏசியா கெப்பிட்டல், த ஒடோட்ரோம், சிலோன் அன்ட் ஃபொரின் ட்ரேட்ஸ், சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் பினான்ஸ், சிரி ஹோல்டிங்ஸ், ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ், ஹியுஜே இன்டர்நஷனல் இன்வெஸ்ட்மன்ட்ஸ், பிசி ஹவுஸ், பீபிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ், ரேடியன்ட் ஜெம்ஸ் இன்டர்நஷனல், ஸ்டான்டர்ட் கெப்பிட்டல், ஏசியா அசட் ஃபினான்ஸ், ஒரியன்ட் காமென்ட்ஸ், பிசி பார்மா, பிசிஎச் ஹோல்டிங்ஸ், ரம்பொட ஃபோல்ஸ் மற்றும் டெஸ் அக்ரோ.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .