2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

போரினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் 2012இல் அதிகளவில் வளர்ச்சி

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணங்கள் 2012ஆம் ஆண்டில் அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சியில் நிர்மாணத்துறை, வங்கியியல் மற்றும் விவசாயத்துறை போன்றன அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வடமாகாணம் 25.9 வீத வளர்ச்சியை 2012 இல் பதிவு செய்திருந்ததாகவும், இதில் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பணவீக்கம் போன்றனவும் உள்ளடங்குவதாகவும், கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் 25 வீத வளர்ச்சியை 2012இல் பதிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வெளி உலகத்துடன் நேரடி தொடர்பை கொண்டதும், அதிகளவு மக்கள் சனத்தொகையை கொண்ட மாகாணமான மேல் மாகாணம் கடந்த ஆண்டில் 13.4 வளர்ச்சியை பதிவு செய்திருந்ததாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .