2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2014'

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹில்டன் ரெசிடன்சஸ்ஸில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2014இல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை கண்காட்சிப்படுத்தியிருந்தன.
 
உள்ளூர் வர்த்தகங்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான பல்வேறு அமெரிக்க உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பில் இந்த வருடத்தின் வர்த்தக கண்காட்சி பிரதான கவனம் செலுத்தியிருந்தது.
 
ஐக்கிய அமெரிக்க தூதரகமும், இலங்கைக்கான அமெரிக்க வர்த்தக சபையும் (AmCham) ஒன்றாக இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்த ஒருநாள் கண்காட்சி நிகழ்வில், நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுடன், இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜெ சிசன் அவர்களும் கலந்து கொண்டார். கண்காட்சியில் பங்குபற்றிய பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் சர்வதேச வர்த்தக நிறுவனங்களாகும். எனினும், இலங்கையில் சிறிய அளவிலான வர்த்தகங்களுக்கான சில புதிய அமெரிக்க நிறுவனங்களை அறிமுகப்படுத்துவதற்கும் இந்த வர்த்தக கண்காட்சி துணை புரிந்தது.
 
'உள்ளூர் நுகர்வோருக்கும், வர்த்தகங்களுக்கும் பரந்தளவிலான அமெரிக்க உற்பத்திகள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு இன்றைய அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2014 வடிவமைக்கப்பட்டிருக்கின்றது' என அமெரிக்க தூதுவர் சிசன் தெரிவித்தார். 'ஐக்கிய அமெரிக்கா, இலங்கை மற்றும் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட வளத்தன்மையை இந்த பங்காளித்துவம் மேம்படுத்தும் என நாம் எதிர்பார்க்கின்றோம்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
சுற்றுலாத் துறை, போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள், புதுப்பிக்கப்படக் கூடிய சக்தி மற்றும் சக்தி வலுவூட்டல் போன்ற பிரிவுகளில் அமெரிக்க நிறுவனங்கள் சிறந்த தரமானவற்றை போட்டிப்பெறுமதியில் வழங்குகின்றன. ஐக்கிய அமெரிக்க உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு வழங்கும் பணத்தின் சிறந்த பெறுமதியை சுட்டிக்காட்டுவதற்கான மற்றும் இலங்கையில் தமது வர்த்தக தொடர்புகளை விஸ்தரிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பத்தினை அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்த அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2014 வழங்குகின்றது.
 
'வெற்றி—வெற்றி பங்காளித்துவத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய அமெரிக்க நிறுவனங்களுக்கான சிறந்த ஆற்றல்களை இலங்கையின் அளப்பரிய தனியார் துறையானது கொண்டுள்ளது' என ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின், பொருளியல் மற்றும் வர்த்தகப் பிரிவுக்கான ஆலோசகர் அலிசன் அரியஸ்-வொகல் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X