2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கோப்பாய் லயன்ஸ் கழகத்தின் 29 ஆவது பதவியேற்பு வைபவம்

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


கோப்பாய் லயன்ஸ் கழகத்தின் 29 ஆவது பதவியேற்பு வைபவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது.

வைத்திய கலாநிதி லயன் எஸ்.குனதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2013-2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமானமும் பதவியேற்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளரினால் சிபாரிசு செய்யப்பட்ட இருபாலையைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு  சமூக சேவைத் திட்டத்தின் கிழ் வீட்டுக் கூரை போடுவதற்கான பண உதவி அளிக்கப்பட்டது.

கல்வி அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் முப்பது பேருக்கான சீருடைகள், முன்பள்ளிச் சிறார்களுக்கான சீருடைகள்  என்பவற்றுடன் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு வேண்டிய காகிதாதிகள்  என்பனவும் இதன்போது வழங்கப்பட்டன.

சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நாற்பது குடும்பங்களுக்கு தலா ஐந்து தென்னம் பிள்ளைகள் வீதம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுனர் லயன் பிரியந்த பெர்ணான்டோ லயன் சீமாட்டி  ஆஷா, கௌரவ விருந்தினாகளாக வட பிராந்திய  கபினற்றின் பிரதி செயலாளர்  லயன் ஆர்.ஜெயபாலன்,  வட பிராந்திய கபினற்றின் பொருளாளர் லயன் ரி.அன்பானந்தன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .