2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இம்மாதம் கொழும்பில் இடம்பெறும் Agile மாநாடு 2014

A.P.Mathan   / 2014 ஜூன் 09 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக கொழும்பில் Agile மாநாடு 2014 இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இதில் உலகின் புகழ்பெற்ற Agile நிபுணர்கள் மற்றும் Agile நுட்பமுறையை பயன்படுத்தும் உள்நாட்டு நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்று தமது அனுபவங்களையும் அறிவையும் உள்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்த நுட்பமுறையை பின்பற்றுபவர்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டின் போது பல்வேறு வகையான தலைப்புகள் கலந்துரையாடப்படவுள்ளதுடன், அவற்றில் மிகவும் அடிப்படையான விடயங்கள் முதல், அபிவிருத்தி தொடர்பான சிக்கலான விடயங்கள் வரை உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு காம்ப்ஸ் சமூகத்தின் மூலம் வலுச்சேர்க்கப்பட்டுள்ள இந்த மாநாடு, எதிர்வரும் ஜுன் 26ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. முழுநாள் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் சர்வதேச பேச்சாளர்களின் உரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இதனை தொடர்ந்து  'Agile QA’, ‘Dev Ops’, ‘Scrum Shortcuts' மற்றும் 'Agile Metrics' போன்ற தலைப்புகளில் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும். இதன் போது இலங்கையின் Agile பின்பற்றுநர்களின் வெள்ளை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படும். இவை கடுமையான தெரிவுக்கமைய தெரிவு செய்யப்பட்டிருந்தன.

விசேட உரைகளை வழங்குவோரில் Crisp Agile மற்றும் Lean Coach Henrik Kniberg, AxisAgile மற்றும் Scrum அவுஸ்திரேலியா பணிப்பாளர் Ilan Goldstein, GoodAgile பிரதம நிறைவேற்று அதிகாரி Pete Deemer, Evolve Beyond முகாமைத்துவ பணிப்பாளர் Gabrielle Benefield, Evolve Beyond பிரதம தொழில்நுட்ப அதிகாரி  Robert Benefield, AxisAgile மற்றும் Scrum அவுஸ்திரேலியா பணிப்பாளர் Colin Tan மற்றும் RnD Agile இன் Compello AS பணிப்பாளர் மற்றும் பிரதம தொழில்நுட்ப அதிகாரி YngvarUgland ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த ஒரு சில ஆண்டுகளில் சர்வதேச ரீதியில் 'Agile' முன்னெடுப்பின் மூலம் மென்பொருள் அபிவிருத்தி செயற்பாட்டில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் அதிகளவு மேம்படுத்தப்பட்ட கொள்கை முறையாகவும் அமைந்துள்ளது. பாரம்பரிய திட்ட முகாமைத்துவ முறைகளுக்கு மாற்றீடாக அமைந்துள்ள இந்த நுட்ப முறை, இலங்கையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையில் இயங்கும் சில கம்பனிகளின் மூலமும் பின்பற்றப்படுகிறது. உள்நாட்டிலும் பிரபல்யமடைந்து வருகிறது.

அறிமுக கொழும்பு Agile மாநாடு 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச புகழ்பெற்ற பேச்சாளர்கள் இருவரும் 99X Technology, Pearson Lanka, WSO2, Virtusa and IFS ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உள்நாட்டு Agile நிபுணர்களும் பங்கேற்றிருந்தனர். 200க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டுக்கு அதிகளவான வரவேற்பும் கிடைத்திருந்தது. இந்த மாநாட்டின் போது உரையாடப்பட்ட தலைப்புகளில், Agile சூழலில் தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகளின் பங்களிப்பு, Agile ஐ பின்பற்றுவதன் மூலம் தரத்தை எய்துவது, ஒரு நிறுவனம் எனும் வகையில் மற்றும் Agile கட்டமைப்பை நிறுவ தேவையான படிமுறைகளை பின்பற்றுவது.

கொழும்பு காம்ப்ஸ் சமூகம் என்பது மென்பொருள் வடிவமைப்பாளர்களை கொண்ட சுயாதீனமான சமூக அமைபாகும். இந்த அமைப்பின் நோக்கம், உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அங்கத்தவர்களின் ஆளுமையை முன்னேற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த கொள்கையின் மூலம், உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்களின் மூலம் சமூகம் ஒன்றை உருவாக்கி, துறையில் காணப்படும் அறிவு மற்றும் ஆளுமை இடைவெளிகளை நிவர்த்தி செய்வது நோக்கமாக அமைந்துள்ளது. இந்த செயற்பாடு என்பது இலங்கையை சர்வதேச மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான மையமாக நிலைநிறுத்துவதற்கான ஒரு ஒன்றிணைந்த முயற்சியாக அமைந்துள்ளது.

இதன் தாபிப்பு முதல் CCC என்பது வௌ;வேறு தகவல் தொழில்நுட்ப பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஒன்று திரட்டி செயற்படுத்துவதற்கான முன்னிலை செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு பயிற்சி முகாம்கள், சந்திப்புகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்திருந்தது. இவற்றில் பெருமளவான பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்ததுடன், ஒவ்வொரு தடவையும் அதிகளவு விறுவிறுப்பான மற்றும் சிக்கலான கொள்கைகள் மற்றும் சிந்தனைகள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

கொழும்பு Agile மாநாடு 2014 என்பது மென்பொருள் பொறியியல் கம்பனியான 99X Technology, Scrum Alliance, certified Scrum trainer GoodAgile ஆகியவற்றின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Tickets.lk என்பது உத்தியோகபூர்வ டிக்கட் வழங்கும் பங்காளராகவும், ReadMe.lk என்பது டிஜிட்டல் ஊடக பங்காளராகவும், ICTA இன் வழிகாட்டலில் இடம்பெறுகிறது. மாநாடு பற்றி மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவும், டிக்கட்களை கொள்வனவு செய்யவும், www.colomboagileconference.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .