2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் BizSmart

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமது வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக இணையத்தளம் ஊடாக மேற்கொள்வதற்கும் அதற்குத் தேவையான இணையத் தளங்களை இலகுவாக நிர்மாணித்துக் கொள்வதற்கும் பிஸ்ஸ்மார்ட் (BizSmart) என்ற பெயரில் புதிய மென்பொருள் ஒன்றை Global Lifestyle Lanka நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
இலங்கையில் முன்னணி இணையத்தள மேம்பாட்டு நிறுவனமான V2K Network இன் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மென்பொருளின் செயற்பாடானது, வர்த்தக மற்றும் கூட்டுத்தாபன கொடுக்கல் வாங்கல்களுக்காக சிறந்து விளங்குவதோடு பல்வேறு தீர்வுகளுக்காகவுமே அறிமுகப்படுத்தப்பட்டதொன்றாகும். 
 
இந்த மென்பொருளை அறிமுகப்படுத்துவதற்கு பிரதான நோக்கமானது, இணையத்தள மேம்பாட்டு நிறுவனங்களை இணைத்துக் கொள்ளும் அளவிற்கு முதலீடு செய்ய முடியாத மற்றும் அது தொடர்பான குறைந்த அறிவுடைய சிறு தொழில் முயற்சியாளர்;கள் தமது பொருட்களையும் சேவைகளையும் இணையத் தளத்தின் ஊடாக பாரிய கொள்வனவாளர்களிடம் கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். 
 
சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தினால் 2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இலங்கைக்குள் அபிவிருத்தி அடைந்து வரும் இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை 3.9 மில்லியன் எனவும் அவர்களில் ஃபேஸ் புக் (facebook) போன்ற சமூக இணையத் தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.2 மில்லியன் ஆகும். இதில் வர்த்தக செயற்பாடுகளுக்காக இணையத் தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு எனவும், இதற்கு காரணம் அதற்காக ஏற்படும் செலவு அதிகமென அவர்கள் அனுமானிப்பதும் இது தொடர்பான போதிய அறிவின்மையுமே ஆகும்.
 
இந்த மென்பொருளின் ஊடாக கணினி பற்றிய முன் அனுபவம் இல்லாதவர்களும் தொலைபேசி ஊடாக 24 மணித்தியாலமும் (BizSmart) தொழிற்பாட்டு தொழில்நுட்ப குழுவினரின் உதவியோடு தனக் கென இணையத்தளமொன்றை உருவாக்கிக் கொள்வதோடு மட்டுமன்றி முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுள்ள வடிவமைப்புக்களையும் பயன்படுத்தி தொழிற் முயற்சிக்கான இலச்சினைகள் (LOGO), வியாபார அட்டை (Visiting Card), முகவரி அச்சிடப்பட்ட கடிதத்தாள் (Letter Head), கடித உறை (Envelope) ஆகியவற்றையும் வடிவமைத்து அச்சிட்டுக் கொள்ள முடியும்.
 
பிஸ்ஸ்மார்ட் (BizSmart) ஊடாக இணையத் தளமொன்றை பதிவு செய்து கொள்ள முடிவதுடன் அதனூடாக நிறுவனத்தின் அல்லது தொழில் முயற்சியின் பெயரை உள்ளடக்கும் போது .com அல்லது .net இணையத்தள பெயரைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு பிஸ்ஸ்மார்ட் (BizSmart) ஊடாக .lk இணையத்தையும் பதிவு செய்துகொள்வதன் ஊடாக தொழில் முயற்சிக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியொன்றை பெற்றுக்கொள்ள முடியும்.
 
BizSmart என்ற மென்பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த Global Lifestyle Lanka நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகள் அபிவிருத்தி பிரிவின் பிரதானி அஞ்சலோ பர்ணபாஸ் கூறுகையில், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இடம்பெறும் துரித அபிவிருத்தியுடன் நாட்டிலுள்ள மனித வளத்தை தகவல் தொழில்நுட்ப பாவனைக்காக பயிற்றுவிக்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு இவ்வாறான படைப்புக்களை நாட்டிற்குள் வியாபார பிரிவுகளில் ஊக்குவிப்பதற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக இலங்கையை தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையமாக மாற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்திட்டத்திற்கு இது உறுதுணையாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X